காரைக்குடி, ஜூலை 21: காரைக்குடி ராமநாதன்செட்டியார் நகராட்சி உயர்நிலைப்பள்ளியில் சிறுதானிய விழிப்புணர்வுவை முன்னிட்டு சிறுதானிய உணவுத் திருவிழா நடந்தது. பள்ளி அறிவியல் மன்ற செயலாளர் ஆசிரியர் சரவணன் வரவேற்றார். தலைமையாசிரியர் அங்கையர்கன்னி முன்னிலை வகித்தார். நகராட்சி சேர்மன் சே.முத்துத்துரை தலைமைவகித்து கண்காட்சியை துவக்கி வைத்து பேசுகையில், முதல்வரின் நடவடிக்கையால் மாணவர்களிடம் சிறுதானியம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த இத்தகைய விழாக்கள் நடந்ததப்பட்டு வருகிறது. இந்த உணவு திருவிழாவில் 100 க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் கலந்து கொண்டு 200க்கும் மேற்பட்ட சிறுதானிய உணவுகளை செய்து அசத்தியுள்ளது பாராட்டக்கூடியது, என்றார். நகர்மன்ற உறுப்பினர் கண்ணன், துரைநாகராஜன், கார்த்தி, வட்டசெயலாளர் பாண்டி உள்பட பலர் கலந்து கொண்டனர்.
The post சிறுதானிய உணவுத் திருவிழா: நகராட்சி சேர்மன் பாராட்டு appeared first on Dinakaran.