மும்பையை அதானி நகரமாக மாற்ற விடமாட்டோம்: சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரே

மும்பை: மும்பையை அதானி நகரமாக மாற்ற விடமாட்டோம் என்று சிவசேனா கட்சி தலைவர் உத்தவ் தாக்கரே தெரிவித்துள்ளார். தாராவி குடிசைப்பகுதி மறுசீரமைப்பு திட்ட டெண்டரை ஆட்சிக்கு வந்தவுடன் ரத்து செய்வோம். டெண்டரை ஏன் இப்போது ரத்து செய்யக்கூடாது என்பதற்கு அரசு பதில் அளிக்க வேண்டும். தாராவி குடியிருப்பாளர்கள், வணிகங்கள் அடியோடு அகற்றப்படாமல் இருப்பதை எனது கட்சி உறுதி செய்யும். தாராவியில் தங்கியிருக்கும் மக்களுக்கு அந்த வட்டாரத்திலேயே 500 சதுர அடி வீடுகள் வழங்கப்பட வேண்டும் என அவர் கூறியுள்ளார்.

The post மும்பையை அதானி நகரமாக மாற்ற விடமாட்டோம்: சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரே appeared first on Dinakaran.

Related Stories: