இந்த நிலையில், தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவியின் பதவிக் காலம் இந்தமாத இறுதியில் நிறைவடைகிறது. அது அதே போல், ஜார்க்கண்ட் ஆளுநர் சி.பி.ராதாகிருஷ்ணன், தெலங்கானா, புதுச்சேரி துணை நிலை ஆளுநர் பதவிகளை கூடுதலாக கவனித்து வருகிறார். தமிழகம், புதுச்சேரி தெலங்கானா உள்ளிட்ட மாநிலங்களுக்கு புதிய ஆளுநர்களை நியமிக்கலாமா என்பது குறித்து ஒன்றிய அரசு பரிசீலித்து வருகிறது. தமிழகத்தை பொறுத்தவரை ஆளுநர் ஆர்.என்.ரவியின் பதவிக்காலம் நீட்டிக்கப்படலாம் என்றே தகவல்கள் தெரிவிக்கின்றன.
தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி கடந்த 15-ம் தே திடெல்லி சென்றார். அங்கு பிரதமர் மோடி, மத்திய அமைச்சர்கள் அமித் ஷா, தர்மேந்திர பிரதான், கிரண் ரிஜிஜு ஆகியோரை சந்தித்து முக்கிய ஆலோசனை நடத்தினார். தமிழகத்தின் சட்டம் – ஒழுங்கு, அரசியல் சூழல் குறித்து விவாதித்தார். இதனிடையே ஆளுநர் ரவியின் பதவிக்காலம் மேலும் 2 ஆண்டுகள் நீட்டிக்கப்படுவதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு ஓரிரு நாளில் வெளியாகும் என்று தெரிகிறது.
The post தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவியின் பதவிக்காலம் மேலும் 2 ஆண்டுகள் நீட்டிப்பா ?.. விரைவில் அறிவிப்பை வெளியிடுகிறது ஒன்றிய அரசு!! appeared first on Dinakaran.