5 மாதங்களுக்கு பிறகு அதிகரித்த டெங்கு பாதிப்பு.. பொதுமக்களுக்கு பொது சுகாதாரத்துறை அறிவுறுத்தல்..!!

சென்னை: தமிழ்நாட்டில் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை 5 மாதங்களுக்கு பிறகு மீண்டும் ஆயிரத்தை கடந்துள்ளது. டெங்குவை கட்டுப்படுத்தும் நடவடிக்கைளை சுகாதாரத்துறை முடக்கிவிட்டுள்ளது. தமிழ்நாட்டில் பல்வேறு மாவட்டங்களில் குறிப்பாக சென்னை, திருவள்ளூர், கோவை, நீலகிரி, கன்னியாகுமரி, தென்காசி உள்ளிட்ட மாவட்டங்களில் பலத்த மழை பெய்து வருகிறது.
இதன் காரணமாக டெங்கு காய்ச்சல் அதிகரிக்க தொடங்கியுள்ளது.

கடந்த ஜனவரி மாதம் முதல் ஜூலை 18ம் தேதி வரை 5,900 பேருக்கு டெங்கு பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. ஜனவரியில் டெங்கு பாதிப்பு ஆயிரத்தை கடந்திருந்த நிலையில், 5 மாதங்களுக்கு பிறகு தற்போது ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர். குறிப்பாக கடந்த 10ம் தேதி முதல் 18ம் தேதி வரை 738 பேர் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

டெங்கு பரவலை தடுக்க பொதுமக்கள் தங்களது இருப்பிடங்களை சுற்றி மழைநீர் தேங்காமல் பார்த்து கொள்ளவும் தண்ணீர் தொட்டிகள், தண்ணீரை சேமித்து வைக்கும் இடங்களை பாதுகாப்பாகவும் மூடிவைக்கவும், மாநகராட்சி பணியாளர்கள் கொசு மருந்து தெளிக்கவும், பொது சுகாதாரத்துறை அறிவுறுத்தியுள்ளது.

The post 5 மாதங்களுக்கு பிறகு அதிகரித்த டெங்கு பாதிப்பு.. பொதுமக்களுக்கு பொது சுகாதாரத்துறை அறிவுறுத்தல்..!! appeared first on Dinakaran.

Related Stories: