அம்பத்தூரில் செயல்படும் மகளிர் அரசினர் தொழிற்பயிற்சி நிலையத்தில் மாணவர் சேர்க்கை: 31ம் தேதி வரை நடக்கிறது

திருவள்ளூர்: திருவள்ளூர் மாவட்ட கலெக்டர் த.பிரபுசங்கர் விடுத்துள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது: அம்பத்தூர் பெண்கள் அரசினர் தொழிற்பயிற்சி நிலையத்தில் 16ம் தேதி முதல் வருகின்ற 31ம் தேதி வரை நேரடி சேர்க்கை நடைபெற்று வருகிறது. 8ம் வகுப்பு தேர்ச்சி 10 மற்றும் 12ம் வகுப்பு தேர்ச்சி மற்றும் தேர்ச்சி பெறாதவர்கள் விண்ணப்பிக்கலாம். வயது வரம்பு கிடையாது. பயிற்சியில் சேர்வதற்கு மாத உதவித் தொகை ரூ.750, இலவச பஸ் பாஸ், மிதிவண்டி, பாடப்புத்தகங்கள், வரைபட கருவிகள், இருசெட் சீருடை, மூடு காலனி மற்றும் சிறந்த தேர்வு நிறுவனங்களில் வேலை வாய்ப்பு வழங்கப்படும். தமிழக அரசு வழங்கும் உயர்கல்வி உதவி தொகை 6ம் வகுப்பு முதல் 12ம் வகுப்பு வரை அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளியில் பயின்ற மாணவிகளுக்கு ஆயிரம் ரூபாய் கூடுதலாக வழங்கப்படும்.

விண்ணப்பதாரர்கள் மதிப்பெண் சான்றிதழ், மாற்றுச் சான்றிதழ், ஜாதி சான்றிதழ், ஆதார் அட்டை, வங்கி கணக்கு புத்தகம் நகல், பாஸ்போர்ட் அளவு புகைப்படங்கள் 5 ஆகியவற்றை எடுத்து நேரில் வரவேண்டும். சேர்க்கை கட்டணம் ரூ.235 மேலும் விவரங்களுக்கு தொலைபேசி எண்: 9840756210, 944017528 என்ற எண்ணில் தொடர்பு கொண்டு பயன்பெறலாம். தொழிற் பிரிவுகள் விவரம்: தையல் தொழிற்நுட்பம் ஒரு வருடம் 8ம் வகுப்பு தேர்ச்சி, கோபா (என்சிவிடி) ஒரு வருடம் 10ம் வகுப்பு தேர்ச்சி. கட்டிட பட வரைவாளர் இரண்டு வருடம் பயிற்சி 10ம் வகுப்பு தேர்ச்சி பெற்று இருக்க வேண்டும். ஸ்டெனோகிராபி தமிழ் அண்ட் இங்கிலீஷ் ஒரு வருடம் பத்தாம் வகுப்பு தேர்ச்சி. இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

 

The post அம்பத்தூரில் செயல்படும் மகளிர் அரசினர் தொழிற்பயிற்சி நிலையத்தில் மாணவர் சேர்க்கை: 31ம் தேதி வரை நடக்கிறது appeared first on Dinakaran.

Related Stories: