நாகர்கோவில், ஜூலை 19: குமரி மாவட்டத்தில் போதை பொருட்கள் விற்பனை செய்பவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க எஸ்பி சுந்தரவதனம் உத்தரவிட்டுள்ளார். அதன்படி போதை பொருட்கள் விற்பனை செய்பவர்கள் கைது செய்யப்பட்டு வருகிறார்கள். கஞ்சா விற்பவர்களை கைது செய்து, அவர்களது வங்கி கணக்குகள் முடக்குவதுடன், குண்டர் சட்டத்திலும் கைது நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. கோட்டார் எஸ்ஐ ஹேமலதா தலைமையில் போலீசார் ஒழுகினசேரி டாஸ்மாக் எதிரே வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக பைக்கில் வந்த ஊட்டுவாழ்மடம் பகுதியை சேர்ந்த பெயிண்டிங் வேலை செய்யும் கலைக்குமார் என்ற சிலுவை(40) என்பவரை போலீசார் தடுத்து சோதனை செய்தனர். அவரிடம் 20 கிராம் கஞ்சா இருந்தது. இதனை தொடர்ந்து கஞ்சாவை பறிமுதல் செய்தனர். மேலும் கஞ்சாவை விற்பனைக்கு வைத்திருந்த கலைக்குமாரை கைது செய்தனர்.
The post கஞ்சா ைவத்திருந்த பெயிண்டர் கைது appeared first on Dinakaran.