டெல்லி: நீட் மறுதேர்வு நடத்த முடியாது என உச்சநீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது. கடந்த மே மாதம் நடைபெற்ற நீட் தேர்வில் பல்வேறு முறைகேடுகள் நடைபெற்றதாக குற்றச்சாட்டு எழுந்தது.மே மாதம் நடந்த நீட் தேர்வை ரத்துசெய்துவிட்டு புதிய தேர்வு நடத்த வலியுறுத்தினர். நீட் தேர்வு எழுதிய மாணவரின் விடைத்தாளே மாற்றப்பட்டுள்ளதாக பாதிக்கப்பட்ட மாணவர் குற்றம் சாடினர். நீட் நுழைவுத் தேர்வு முறைகேடுகளுக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் பல்வேறு பொதுநலன் வழக்குகள் தொடரப்பட்டன. மே மாதம் நடந்த நீட் தேர்வை ரத்துசெய்துவிட்டு புதிய தேர்வு நடத்தக் கோரி 36 வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டது.
இதனை அனைத்தையும் ஒருங்கிணைத்து உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. அப்போது சென்னை ஐஐடி சார்பில் நீட் தேர்வு முறைகேடு குறித்த விசாரணை அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது. விசாரணையின் ஒரு பகுதியை வெளியிட வேண்டும் என மனுதாரர்கள் வலியுறுத்தினர். இதனை உச்சநீதிமன்ற நீதிபதிகள் ஏற்க மறுத்தனர். நீட் முறைகேடு குறித்த ஆய்வறிக்கையை தயாரித்த இயக்குனர், தேசிய தேர்வு முகமையில் உறுப்பினராக இல்லை என ஒன்றிய அரசு தரப்பில் வாதிடப்பட்டது.
அதனை தொடர்ந்து வினாத்தாள் கசிவு நீட் தேர்வை முழுமையாக பாதித்தது என்பதை நிரூபித்தால் தேர்வு ரத்துசெய்வோம் தலைமை நீதிபதி தெரிவித்தார். மனுதாரர் தரப்பின் வாதங்கள் ஏற்புடையதாக இருந்தால் அவர்கள் கூறக்கூடிய அம்சம் அடிப்படையில் விசாரிக்க தயார். விசாரணை ஒரு இலக்கில் செல்கிறது, சிபிஐ எங்களிடம் சொன்ன விஷயங்களை வெளியிட்டால் அது விசாரணையை பாதிக்கும் என்றும் கூறினார்.
The post நீட் மறுதேர்வு நடத்த உத்தரவிட முடியாது: உச்சநீதிமன்றம் திட்டவட்டம்! appeared first on Dinakaran.