ஜாம்புவானோடை தர்கா புற காவல் நிலையத்தில் பாதுகாப்பு கலந்தாய்வு கூட்டம்

 

முத்துப்பேட்டை, ஜூலை 18: முத்துப்பேட்டை அடுத்த ஜாம்புவானோடை தர்கா புற காவல் நிலையத்தில் பாதுகாப்பு மற்றும் அடிப்படை வசதிகள் மேற்கொள்வது குறித்து பல்வேறு துறை அதிகாரிகள் கலந்தாய்வுக் கூட்டம் முத்துப்பேட்டை இன்ஸ்பெக்டர் கழனியப்பன் தலைமையில் நேற்று நடைபெற்றது. இதில் தர்கா முதன்மை அறங்காவலர் எஸ்.எஸ்.பாக்கர்அலி சாஹீப், தர்கா, கிராம நிர்வாக அலுவலர் புருஷோத்தமன், ஊராட்சி மன்ற தலைவர் லதா பாலமுருகன், ஒன்றிய கவுன்சிலர் மற்றும் ஊரக வளர்ச்சி துறை அதிகாரிகள், தீயணைப்பு துறை அதிகாரிகள், மின்சார வாரியத்துறை அதிகாரிகள், நெடுஞ்சாலைதுறை, பொதுப்பணித்துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர். இதில் தர்கா நிர்வாகம் மற்றும் பொதுமக்கள் தரப்பில் தர்கா பகுதியில் பக்தர்கள் மற்றும் சுற்றுலா பயணிகள் வசதிக்கு அடிப்படை வசதிகள் குறித்தும் பாதுகாப்பு குறித்தும் ஆலோசிக்கப்பட்டது.

 

The post ஜாம்புவானோடை தர்கா புற காவல் நிலையத்தில் பாதுகாப்பு கலந்தாய்வு கூட்டம் appeared first on Dinakaran.

Related Stories: