×
Saravana Stores

காட்டுப்பகுதியில் திடீர் தீ

 

திருப்பூர், ஜூலை 18: திருப்பூர் காங்கயம் ரோடு முதலிபாளையம் ரேஷன் கடை பின்புறம் உள்ள காட்டுப்பகுதியில் திடீரென்று நேற்று தீப்பிடித்து எரிய தொடங்கியது. உடனடியாக அருகில் இருந்தவர்கள் திருப்பூர் தெற்கு தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற தீயணைப்புத்துறையினர். திருப்பூர் தெற்கு தீயணைப்பு ஆய்வாளர் மோகன் தலைமையில் தீயை கட்டுப்படுத்தும் பணியில் ஈடுபட்டனர். சுமார் 1 மணி நேரம் போராடி தீயை அணைத்தனர். இது குறித்து போலீசார் கூறுகையில், காட்டுப் பகுதியில் மர்ம நபர்கள் தீ வைத்து சென்றிருக்கலாம் என்றும் இது பரவி இருந்தால், அருகில் இருந்த பனியன் நிறுவனங்கள், வணிக வளாகங்கள் பாதித்து இருக்கக்கூடும். உடனடியாக துரிதமாக செயல்பட்டதன் மூலம் தீ பரவாமல் தடுக்கப்பட்டது என தெரிவித்தனர்.

The post காட்டுப்பகுதியில் திடீர் தீ appeared first on Dinakaran.

Tags : Tirupur ,Mudalipalayam ,Kangayam Road ,Tirupur South Fire Department ,Dinakaran ,
× RELATED கோவை, திருப்பூர், ஈரோட்டிலிருந்து 3...