திருப்பூர், ஜூலை 18: திருமுருகன்பூண்டி பெருமாள் கோவில் பகுதியை சேர்ந்தவர் பழனிச்சாமி. இவருடைய மனைவி செல்வி (49). பூ வியாபாரி. சம்பவத்தன்று செல்வி வீட்டை பூட்டி விட்டு வெளியே சென்றிருந்தார். சிறிது நேரம் கழித்து வந்து பார்த்தபோது வீட்டின் முன் பக்க கதவில் பூட்டப்பட்டிருந்த பூட்டு உடைக்கப்பட்டிருந்தது. உள்ளே சென்று பார்த்த போது பீரோவில் இருந்த கம்மல், தங்க நாணயம் உள்பட 2.4 பவுன் நகை திருட்டு போயிருந்தது தெரிய வந்தது. இதுகுறித்து செல்வி கொடுத்த புகாரின் பேரில் திருமுருகன்பூண்டி போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினர். மேலும் அப்பகுதியில் பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமரா காட்சிகளையும் பார்வையிட்டனர். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
The post வீட்டின் பூட்டை உடைத்து நகை திருட்டு appeared first on Dinakaran.