மதுரை காமராஜர் பல்கலைக்கழக விதைத் திருவிழாவில் விவசாயிகள் பங்கேற்பு

திருப்பரங்குன்றம், ஜூலை 18: மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற விதைத் திருவிழாவில் திரளான விவசாயிகள் பங்கேற்றனர். தென் மாவட்ட இயற்கை விவ்சாயிகள் கூட்டமைப்பு சார்பில், மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தில் நேற்று விதைத்திருவிழா நடைபெற்றது. இதில் தமிழகம் முழுதும் இருந்து மரபு விதைகள் கொண்டு வரப்பட்டு காட்சிப்படுத்தபட்டது. இதில் மரபு ரகங்களான எஸ்.சென்னம்பட்டி கத்திரிக்காய், அதலைக்காய், எட்டுநாழி கத்தரிக்காய், செங்கப்படை வரகு உள்ளிட்ட விதைகள் காட்சிக்கு வைக்கப்பட்டதுடன், விவசாயிகளுக்கு வழங்கப்பட்டது. இந்த விழாவில் விதைகள் குறித்த ஆவணப்படம் வெளியிடப்பட்டது. தமிழகம் முழுவதும் இருந்து கொண்டு வரப்பட்ட காய்கறி, கீரை வகைகளின் விதைகள் விவசாயிகளுக்கு விற்பனை செய்யப்பட்டது. மேலும் சிலம்பம், ஒயிலாட்டம், கருத்தரங்கம் ஆகியவை நடைபெற்றன. இதில் பங்கேற்ற விவசாயிகளுக்கு சிறுதானிய உணவுகள் வழங்கப்பட்டது. இதில் ஏராளமான இயற்கை விவ்சாயிகள், ஆர்வலர்கள், மாணவர்கள் கலந்து கொண்டனர்.

The post மதுரை காமராஜர் பல்கலைக்கழக விதைத் திருவிழாவில் விவசாயிகள் பங்கேற்பு appeared first on Dinakaran.

Related Stories: