திருப்பூர், ஜூலை 17: திருப்பூர் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் நேற்று காலை முதல் வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டது திருப்பூர் மாநகரின் ஒரு சில பகுதிகளில் சாரல் மழை பெய்தது. இந்நிலையில் நேற்றைய நிலவரப்படி பல்லடத்தில் 4 மிமீ மழை அளவும், தாராபுரம் தாலுகா பகுதியில் 4 மிமீ மழை பொழிவும், உப்பாறு அணை பகுதியில் 10 மிமீ, உடுமலைப்பேட்டை பகுதியில் 27 மிமீ, அமராவதி அணை பகுதியில் 22 மிமீ, மாவட்டத்தில் அதிகபட்சமாக திருமூர்த்தி அணை பகுதியில் 51 மிமீ , மடத்துக்குளம் தாலுக்கா பகுதியில் 10 மிமீ என மாவட்டம் முழுவதும் 178 மிமீ மழைப்பொழிவு பதிவாகி இருப்பதாகவும், சராசரியாக 8.90 மில்லி மீட்டர் மழை பதிவாகி இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
The post திருப்பூரில் 178 மிமீ மழைப்பொழிவு பதிவு appeared first on Dinakaran.