ஈரோடு, ஜூலை 17: ஈரோடு மாவட்டத்தில் டாஸ்மாக் கடைகள் மூடிய நேரத்தில் மதுபாட்டில்களை பதுக்கி கூடுதல் விலைக்கு விற்பனை செய்வோர் மற்றும் வெளி மாநில மதுபாட்டில்களை கடத்தி வருவோர் மீது போலீசார் தொடர் நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.
இதில், மாவட்டத்தில் போலீசார் நேற்று முன்தினம் தீவிர சோதனையில் ஈடுபட்டு வந்தனர். இதையடுத்து, பர்கூர் வரட்டுப்பள்ளம் சோதனை சாவடி அருகே சட்ட விரோதமாக மது விற்பனையில் ஈடுபட்டதாக அந்தியூர் பர்கூரை சேர்ந்த செல்லப்பன் (44), என்பவரை கைது செய்தனர்.
இதேபோல், பவானிசாகர் தொட்டம்பாளையத்தில் புளியம்பட்டியை சேர்ந்த சரவணக்குமார் (36), முருகேசன் (49), தாளவாடியில் ஆரோக்கியசாமி (33), மலையம்பாயைளத்தில் விக்னேஷ்வரன் (21), ஆகிய 5 பேரை போலீசார் கைது செய்து 44 மதுபாட்டில்களை பறிமுதல் செய்தனர்.
இதேபோல், அரசால் தடை செய்யப்பட்ட குட்கா போன்ற புகையிலை பொருட்களை விற்பனை செய்ததாக பெருந்துறை சிப்காட்டில் ஈங்கூரை சேர்நத் தீனதயாளபிரபு (48), பங்களாபுதூரில் அரக்கன்கோட்டையை சேர்ந்த ராஜேந்திரன் மனைவி ராதாமணி (54), புளியம்பட்டியில் தண்டபாணி (71) ஆகிய 3 பேரை போலீசார் கைது செய்து, அவர்களிடம் இருந்து புகையிலை பொருட்களை பறிமுதல் செய்தனர்.
The post மது-புகையிலை விற்ற பெண் உட்பட 8 பேர் கைது appeared first on Dinakaran.