ராமேஸ்வரம், ஜூலை 17: சாலைகளில் சாஷ்டாங்கமாக நமஸ்காரம் செய்தவாறு ராஜஸ்தான் மாநிலத்திலிருந்து ராமநாதாசுவாமி கோயிலில் சாமி தரிசனம் செய்வதற்காக சாது ஒருவர் நேற்று யாத்திரையாக ராமேஸ்வரம் வந்தார். ராஜஸ்தான் மாநிலம் கரோலி மாவட்டம், கூடலாபாடியை சேர்ந்தவர் ராஜகிரி மகராஜ்(60). இவர், கடந்த 2023 பிப்ரவரி மாதத்திலிருந்து 18 மாதங்களாக சாலை வழியாக ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயிலுக்கு சாமி தரிசனம் செய்வதற்காக வந்துள்ளார். மற்ற இரண்டு சாதுக்கள் சைக்கிளில் சாது ராஜகிரி மகராஜை பின்தொடர்ந்து உணவு ஏற்பாடுகளைக் கவனிக்கின்றனர். சாது ராஜகிரி மகராஜ் சாலையில் சாஸ்டாங்கமாக நமஸ்காரம் செய்வதற்காக தெர்மகோலில் நைலான் சாக்கினை போர்வை போல் சுற்றி ஒரு பலகை போல் செய்துள்ளார். அந்த தெர்மகோல் பலகையை சாலையில் கிடத்தி சாஸ்டாங்க நமஸ்காரம் செய்தவாறு நகர்கின்றார்.
The post சாலைகளில் சாஷ்டாங்கமாக நமஸ்காரம் செய்தவாறு சாது பயணம் appeared first on Dinakaran.