×
Saravana Stores

சி.ஐ.டி.யு. தொழிற்சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்

 

ஈரோடு, ஜூலை 17: சி.ஐ.டி.யு. ஈரோடு மாவட்டக்குழு சார்பில் சென்னிமலை ரோட்டில் உள்ள தொழிலாளர் துறை அலுவலகம் முன்பு நேற்று காலை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்துக்கு சி.ஐ.டி.யு. மாவட்ட தலைவர் சுப்ரமணியன் தலைமை வகித்தார். மாவட்ட செயலாளர் ஸ்ரீராம் முன்னிலை வகித்தார்.

இதில், கட்டுமானம், ஆட்டோ, தையல், அமைப்பு சாரா டிரைவர்கள், சுமை தூக்குவோர் உள்ளிட்ட அமைப்பு சாரா தொழிலாளர் நல வாரியங்களில் பதிவு செய்த 22 லட்சம் தொழிலாளர்களின் தரவுகளை மீட்டெடுத்து பாதுகாக்க வேண்டும். அனைத்து வாரியங்களிலும் 6ம் வகுப்பு முதல் கல்வி உதவித்தொகை வழங்க வேண்டும். உதவி தொகையை உயர்த்தி வழங்க வேண்டும்.

கட்டுமான தொழிலாளர் நல வாரியத்தில் வீடு கட்டும் திட்டத்துக்கு தேர்வு செய்யப்பட்ட உறுப்பினர்களுக்கு நிதி வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன. இதில் சி.ஐ.டி.யு. நிர்வாகிகள் கனகராஜ், கிருஷ்ணன், ஜெகநாதன், சேக்தாவூத், மாதவன், பிரபு உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

The post சி.ஐ.டி.யு. தொழிற்சங்கத்தினர் ஆர்ப்பாட்டம் appeared first on Dinakaran.

Tags : CITU Trade unionists ,Erode ,C.I.T.U. ,Erode District Committee ,Labor Department ,Chennimalai Road ,C.I.T.U. District ,President ,Subramanian ,District Secretary ,Sriram ,C.I.T.U. Trade unionists ,Dinakaran ,
× RELATED போலீசார் சார்பில் 4 இடங்களில் பட்டாசு கடை துவக்கம்