×
Saravana Stores

செவிலிமேடு பாலாறு மேம்பாலம் சீரமைப்பு

 

காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் – வந்தவாசி சாலையில் செவிலிமேடு பாலாறு மேம்பாலம் சேதமடைந்துள்ளதாக வெளியான தினகரன் செய்தி எதிரொலியாக மேம்பாலம் சீரமைக்கப்பட்டது. காஞ்சிபுரம் – வந்தவாசி சாலையில், சாலையோர பள்ளங்களால் தொடரும் விபத்துகள் என்ற தலைப்பில், பாலாறு மேம்பாலம் சேதமடைந்துள்ளது குறித்து கடந்த ஜூலை 15ம்தேதி தினகரன் நாளிதழில் படத்துடன் செய்தி வெளியாகி இருந்தது.

இந்த, பாலம் வழியாக புஞ்சையரசன்தாங்கல், அப்துல்லாபுரம், தூசி, மாமண்டூர், நத்தக்கொல்லை, பல்லாவரம், அய்யங்கார்குளம், வெம்பாக்கம், கோளிவாக்கம் கூழமந்தல், ஆக்கூர் உள்ளிட்ட 100க்கும் மேற்பட்ட கிராமங்களை சேர்ந்த பொதுமக்கள், நெசவாளர்கள் ஆகிய அனைவரும் மருத்துவமனை, பள்ளி உள்ளிட்ட அனைத்து அத்தியாவசிய பணிகளுக்கும் இந்த பாலத்தின் வழியாக செல்வதால் விபத்து அபாயம் உள்ளதை குறிப்பிட்டு படத்துடன் செய்தி வெளியானது.

இந்நிலையில், நேற்று முன்தினம் மாவட்ட நிர்வாகம் சார்பில், சாலையில் உள்ள பள்ளங்களில் தார் போடப்பட்டு சீரமைக்கப்பட்டது. இதற்காக மாவட்ட நிர்வாகம் மற்றும் செய்தி வெளியிட்ட தினகரன் நாளிதழுக்கு பாராட்டு தெரிவித்த அப்பகுதி பொதுமக்கள், விரைவில் பாலத்தை முழுமையாக சீரமைக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர்.

The post செவிலிமேடு பாலாறு மேம்பாலம் சீரமைப்பு appeared first on Dinakaran.

Tags : Sevilimedu Palaru ,Kanchipuram ,Dhinakaran ,Kanchipuram- ,Vandavasi road ,Kanchipuram – ,Palaru ,Sevilimedu ,Dinakaran ,
× RELATED காஞ்சிபுரம் மாநகராட்சி 4வது வார்டில்...