செங்கல்பட்டு: செங்கல்பட்டு மாவட்டத்தில் இம்மாதம் 19ம் தேதி விவசாயிகள் குறைதீர் கூட்டம் நடைபெற உள்ளது. இதுகுறித்து செங்கல்பட்டு மாவட்ட கலெக்டர் அருண்ராஜ் வெளியிட்டு ள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: விவசாயிகள் குறைதீர் கூட்டம் வரும் 19ம் தேதி (வெள்ளிக்கிழமை) காலை 10.30 மணியளவில் மாவட்ட கலெக்டர் தலைமையில் நடைபெற உள்ளது.
செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள அனைத்து விவசாயிகளும் இக்கூட்டத்தில் கலந்து கொள்ளும் வகையில் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் தகுந்த ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. எனவே, செங்கல்பட்டு மாவட்ட விவசாயிகள் இக்கூட்டத்தில் கலந்து கொண்டு விவசாயம் தொடர்புடைய கோரிக்கைகளை மட்டும் தெரிவித்து பயன்பெறலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
The post செங்கல்பட்டு மாவட்டத்தில் விவசாயிகள் குறைதீர் கூட்டம் appeared first on Dinakaran.