காஞ்சி காமாட்சியம்மன் கோயிலுக்கு தங்க முலாம் பூசப்பட்ட வெள்ளிக்குடை காணிக்கை

காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் காமாட்சி அம்மனுக்கு திருவிழா காலங்களில் உற்சவத்தின்போது பயன்படுத்துவதற்காக சென்னையை சேர்ந்த தம்பதியர், தங்க முலாம் பூசப்பட்ட வெள்ளிக்குடையை நேற்று காணிக்கையாக வழங்கினார். சென்னை நங்கநல்லூரை சேர்ந்த விஜயகுமார் – நீரஜா தம்பதியர், தங்க முலாம் பூசப்பட்ட வெள்ளிக்குடையை காஞ்சிபுரம் காமாட்சியம்மன் கோயில் ஸ்ரீ காரியம் சுந்தரேசனிடம் வழங்கினார்.

முன்னதாக, அவர் காஞ்சிபுரம் சங்கர மடத்தில் உள்ள மகா பெரியவர் மற்றும் ஜெயேந்திரர் அதிஷ்டானங்களில் வைத்து வழிபாடு செய்தார்.  இதுகுறித்து கோயில் ஸ்ரீ காரியம் சுந்தரேசன் கூறுகையில், ‘இக்குடையானது திருவிழா காலங்களில் உற்சவர் காமாட்சி அம்பிகைக்கும், தேர்த்திருவிழா நடைபெறும் நாட்களிலும் பயன்படுத்தப்படும்’ என்றார்.

The post காஞ்சி காமாட்சியம்மன் கோயிலுக்கு தங்க முலாம் பூசப்பட்ட வெள்ளிக்குடை காணிக்கை appeared first on Dinakaran.

Related Stories: