இன்று முதல் வரும் 20ம் தேதி வரை தினமும் கணபதி ஹோமம், உஷபூஜை, களபாபிஷேகம், கலசாபிஷேகம் உள்பட வழக்கமான பூஜைகளுடன், படிபூஜை உதயாஸ்தமய பூஜை உள்பட சிறப்பு பூஜைகளும் நடைபெறும். இந்த 5 நாளிலும் காலை 5.20 மணி முதல் 10 மணி வரை பக்தர்கள் நெய்யபிஷேகம் நடத்தலாம். அதைத்தொடர்ந்து வரும் 20ம் தேதி இரவு 10 மணிக்கு சபரிமலை கோயில் நடை சாத்தப்படும். அன்றுடன் ஆடி மாத பூஜைகள் நிறைவடையும். சபரிமலையில் கடந்த சில தினங்களாக பலத்த மழை பெய்து வருகிறது. கனமழையையும் பொருட்படுத்தாமல் பக்தர்கள் வரிசையில் காத்திருந்து தரிசனம் செய்து வருகின்றனர்.
The post ஆடி மாத பூஜைகள் தொடக்கம்: சபரிமலையில் பக்தர்கள் குவிகின்றனர் appeared first on Dinakaran.