* ஜவுளித்துறை ஆணையராக ஐஏஎஸ் அதிகாரி ஜெயகாந்தன் நியமிக்கப்பட்டுள்ளார்.
* தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழக இயக்குநராக மோகன் ஐஏஎஸ் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
* ஐஏஎஸ் அதிகாரி மோகன் ‘முதல்வரின் முகவரி’ திட்டத்தின் சிறப்பு அதிகாரியாக இருந்த நிலையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தகுந்தது.
* மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வை துறை இயக்குநராக ஐஏஎஸ் அதிகாரி கார்த்திகா நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
* மீன்வளத்துறை மேலாண் இயக்குநராக ஐஏஎஸ் அதிகாரி கஜலட்சுமி பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
* நெல்லை ஆணையர் தாக்கரே சுபம் ஞானதியோராவ் ஈரோடு வணிகவரி இணை ஆணையராக இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
* இந்து சமய அறநிலையத்துறை ஆணையராக ஐஏஎஸ் அதிகாரி ஸ்ரீதர் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
* அறநிலையத்துறை ஆணையராக இருந்த முரளிதரன் சமூக பாதுகாப்பு திட்ட இயக்குநராக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
* டெல்லி தமிழ்நாடு இல்லத்தில் கூடுதல் ஆணையராக ஐஏஎஸ் அதிகாரி அதிஷ் குமார் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
* சமூக சீர்திருத்தத்துறை செயலாளராக இருந்த ஆபிரகாம் தொழில்நுட்பக் கல்வி ஆணையராக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
* போக்குவரத்து துறை ஆணையராக இருந்து சண்முகசுந்தரம் கைத்தறித்துறை இயக்குநராக மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
* போக்குவரத்து துறை ஆணையராக ஐஏஎஸ் அதிகாரி சுஞ்சோங்கம் ஜடக் சிரு நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
* புதுக்கோட்டை ஆட்சியர் மெர்சி ரம்யா ஒருங்கிணைந்த குழந்தை மேம்பாட்டு திட்ட ஆணையராக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
* கடலூர் ஆட்சியர் அருண் தம்புராஜ் தமிழ்நாடு சுகாதார அமைப்பு திட்ட இயக்குநராக பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
* நாகை ஆட்சியராக இருந்த ஜானி டாம் வர்கீஸ் குழந்தை நலத்துறை இயக்குநராக மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
The post ஜவுளித்துறை ஆணையராக ஜெயகாந்தன் நியமனம்: தமிழ்நாட்டில் மேலும் 25 ஐ.ஏ.எஸ். அதிகாரிகளை பணியிட மாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவு appeared first on Dinakaran.