அதன் அடிப்படையில்;
-
- உள்துறை செயலாளராக இருந்த அமுதா பணியிடமாற்றம் செய்யப்பட்டு தமிழ்நாடு அரசின் வருவாய் மற்றும் பேரிடர் துறை செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.
-
- தமிழ்நாடு அரசின் உள்துறை செயலாளராக தீரஜ்குமார் நியமனம்
-
- சென்னை மாநகராட்சி ஆணையராக இருந்த ராதாகிருஷ்ணன் கூட்டுறவு மற்றும் உணவு பாதுகாப்புத்துறை கூடுதல் செயலாளராக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
-
- தமிழ்நாடு அரசின் உயர்கல்வித்துறை செயலாளராக இருந்த குமரகுருபரன் சென்னை மாநகராட்சி ஆணையராக நியமிக்கப்பட்டுள்ளார்.
-
- கூட்டுறவு மற்றும் உணவு பாதுகாப்புத்துறை கூடுதல் செயலாளராக இருந்த கோபால் கால்நடைத்துறையின் செயலாளராக நியமிக்கப்பட்டார்.
-
- தொழில்நுட்ப கல்வி இயக்கத்தின ஆணையராக இருந்த வீரராகவராவ் தொழிலாளர் துறையின் ஆணையராக நியமிக்கப்பட்டுள்ளார்.
-
- தமிழ்நாடு அரசின் வருவாய் மற்றும் பேரிடர் துறையின் செயலாளராக இருந்த ராஜாராமன் தமிழ்நாடு அரசின் தமிழ் வளர்சிதுறை துறைக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
-
- ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியாரக இருந்த விஷ்ணுசந்திரன் தமிழ்நாடு அரசின் பொதுத்துறை துணை செயலாளராக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
-
- நீலகிரி ஆட்சியராக இருந்த அருணா புதுக்கோட்டை ஆட்சியராக பணியிடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
-
- வணிகவரித்துறை இணை ஆணையராக இருந்த லட்சுமி பாவ்யா நீலகிரி மாவட்ட ஆட்சியராக நியமிக்கப்பட்டுள்ளார்.
-
- தமிழ்நாடு சிறுதொழில் வளர்ச்சி கழக (SIDCO) நிர்வாக இயக்குநராக இருந்த மதுமதி ஐ.ஏ.எஸ் பள்ளி கல்வித்துறை செயலாளராக மாற்றம்
-
- தமிழ்நாடு பெண்கள் வளர்ச்சி கழகத்தின் இயக்குனராக இருந்த பிரியங்கா தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியராக நியமிக்கப்பட்டுள்ளார்.
-
- சிப்காட் இயக்குனராக இருந்த ஆகாஷ் நாகப்பட்டினம் மாவட்ட ஆட்சியராக நியமிக்கப்பட்டுள்ளார்.
-
- தமிழ்நாடு அரசின் துணை செயலாளராக இருந்த ஆதித்யா செந்தில்குமார் தற்போது கடலூர் மாவட்ட ஆட்சியரகா நியமிக்கப்பட்டுள்ளார்.
-
- தாம்பரம் மாநகராட்சி ஆணையராக இருந்த அழகுமீனா கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியராக நியமிக்கப்பட்டுள்ளார்.
- நகராட்சி நிர்வாகத்துறையின் இணை ஆணையராக இருந்த சிரஞ்சித்சிங் கலோன் ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியராக நியமிக்கப்பட்டுள்ளார்.
The post தமிழ்நாட்டில் காவல்துறை அதிகாரிகளை தொடர்ந்து 15 ஐஏஎஸ் அதிகாரிகளை இடமாற்றம் செய்து தமிழ்நாடு அரசு உத்தரவு appeared first on Dinakaran.