நாளை ஆடி மாதம் பிறப்பதையொட்டி திருப்புவனம் சந்தையில் ஆடு விற்பனை அமோகம்..!!

சிவகங்கை: சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் கால்நடை சந்தையில் ஆடிமாதம் பிறப்பதையொட்டி ஆடு விற்பனை களைகட்டியது. திருப்புவனம் சந்தையில் வாரம் தோறும் செவ்வாய்க்கிழமை அதிகாலை 5 மணி முதல் 8 மணி வரை கால் நடைசந்தை நடைபெறும். திருப்புவனம் சுற்றுவட்டாரத்தில் உள்ள 150க்கும் மேற்பட்ட கிராமங்களில் இருந்து விவசாயிகள் ஆடு, மாடு, கோழிகளை விற்பனை செய்வது வழக்கம் நாளை ஆடிமாதம் பிறப்பதை ஒட்டி இன்று அதிகாலை முதலே கால்நடை சந்தை களைகட்டியது.

கடந்த வாரம் 8 ஆயிரம் ரூபாய்க்கு விற்கப்பட்ட 10 கிலோ ஆடு தற்போது ரூ.15 ஆயிரம் வரை விற்கப்படுகிறது. இறைச்சிகாக விற்பனை செய்யப்படும் ஆடுகள் தவிர்த்து சண்டைகளுக்காக வளர்க்கப்படும் ஆடுகள் அதிகளவில் விற்பனையானது. கோழிகளின் விளையும் ரூ.300 முதல் ரூ.400வரை விற்கப்பட்டன. 6 கிலோ எடையுள்ள கின்னிக்கோழிகள் ஜோடி ரூ.1500க்கும் 8 கிலோ எடையுள்ள வாத்துகள் ஒரு ஜோடி ரூ.2400க்கும் விற்பனை செய்யப்பட்டன. சண்டை சேவல் ரூ.3000வரை விற்பனையானது. ஆடுகளை ஏற்றி செல்வதற்காக 4 வழி சாலையின் இருபுறமும் ஏராளமான சரக்கு வாகனங்கள் நிறுத்தபட்டிருந்ததால் அப்பகுதி பரபரப்பாக காணப்பட்டது.

 

The post நாளை ஆடி மாதம் பிறப்பதையொட்டி திருப்புவனம் சந்தையில் ஆடு விற்பனை அமோகம்..!! appeared first on Dinakaran.

Related Stories: