ஈரோடு, ஜூலை 16: ஈரோடு மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் மாதம் தோறும் 3வது வெள்ளிக்கிழமை, தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் நடத்தப்பட்டு வருகிறது. அதன்படி இம்மாதத்துக்கான முகாம் வரும் 19ம் தேதி காலை 10 மணி முதல் மதியம் 3 மணி வரை ஈரோடு மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் நடைபெறவுள்ளது.
வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித் துறையின் மூலமாக நடத்தப்படும் இவ்வேலைவாய்ப்பு முகாம், வேலை நாடுநர்கள் மற்றும் வேலைஅளிப்பவர்களுக்கு முற்றிலும் இலவசமாக செயல்படுத்தப்படுகிறது. எனவே, ஈரோடு மாவட்டத்தில், தனியார் துறையில் பணியாற்ற ஆர்வமாக உள்ள அனைவரும் இந்த வேலைவாய்ப்பு முகாமில் பங்கேற்று பயனடையலாம். இங்கு தேர்ந்தெடுக்கப்படும் வேலை நாடுநர்களின் வேலைவாய்ப்பு அலுவலகப்பதிவு எண் ரத்து செய்யப்படமாட்டாது என கலெக்டர் ராஜகோபால் சுன்கரா தெரிவித்துள்ளார்.
The post 19ம் தேதி தனியார் துறை வேலை வாய்ப்பு முகாம் appeared first on Dinakaran.