- செங்கல்பட்டு செங்கல்பட்டு
- அல்தாஜ் ஹோட்டல்
- சென்னை - திருச்சி தேசிய நெடுஞ்சாலை
- செங்கல்பட்டு நகர காவல் நிலையம்
செங்கல்பட்டு, ஜூலை 16: செங்கல்பட்டு நகர காவல் நிலைய எல்லைக்குட்பட்ட சென்னை – திருச்சி தேசிய நெடுஞ்சாலை அருகே அல்தாஜ் ஹோட்டல் எதிரில் எரிவாயு (இன்டேன்) நிரப்பி சென்ற டேங்கர் லாரி, டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து சாலையில் உள்ள தடுப்புச்சுவர் மீது ஏறி விபத்துக்குள்ளானது. சென்னையில் இருந்து திருநெல்வேலி மாவட்டத்திற்கு இன்டேன் எரிவாயுவை நிரப்பிக்கொண்டு சென்ற டேங்கர் லாரி செங்கல்பட்டு நகர காவல் எல்லைக்கு உட்பட்ட பைபாஸ் சாலையில் அல்தாஜ் ஹோட்டல் எதிரே சென்றபோது ஆம்னி பேருந்து, லாரி என ஒருவருக்கொருவர் போட்டிப்போட்டுக்கொண்டு சென்றுள்ளனர்.இதில், டேங்கர் லாரியை ஓட்டிவந்த நாமக்கல் பகுதியை சேர்ந்த குழந்தைவேலு மகன் கோபி (29) என்பவரின், கட்டுப்பாட்டை இழந்த டேங்கர் லாரி டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து சாலையின் நடுவே உள்ள தடுப்புச்சுவர் மீது ஏறி முன்பகுதி தடுப்புச்சுவரிலும், பின்பகுதி சாலையிலும் நின்றது. இதில், டிரைவர் கோபி சிறுகாயங்களுமின்றி அதிர்ஷ்டவசமாக உயிர்தப்பினார். இச்சம்பவத்தால், சென்னை – திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் ஒருமணி நேரத்திற்கும் மேலாக போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இதுகுறித்து செங்கல்பட்டு நகர போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று டேங்கர் லாரியை அகற்றி போக்குவரத்து நெரிசலை சரி செய்தனர்.
The post சாலை தடுப்பு சுவரில் எரிவாயு டேங்கர் லாரி மோதி விபத்து: செங்கல்பட்டு அருகே பரபரப்பு appeared first on Dinakaran.