நாகர்கோவில், ஜூலை 16: குமரி மாவட்டம் முழுவதும் விடிய விடிய சாரல் மழை பெய்த நிலையில் பாலமோரில் 28.2 மி.மீ மழை பெய்திருந்தது. தென்மேற்கு பருவமழை பெய்து வரும் நிலையில் குமரி மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக சாரல் மழை பெய்து வருகிறது. மலையோர பகுதிகள் அணையின் நீர்பிடிப்பு பகுதிகளிலும் மழை காணப்படுகிறது. நேற்று காலை முதல் வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்ட நிலையில் நாகர்கோவில் உட்பட மாவட்டத்தில் பெரும்பாலான இடங்களில் விட்டுவிட்டு மழை பெய்த வண்ணம் இருந்தது. இதனால் வெப்பத்தின் தாக்கம் தணிந்து குளிர்ச்சி நிலவியது.
மாவட்டத்தில் நேற்று காலை வரை அதிகபட்சமாக பாலமோரில் 28.2 மி.மீ மழை பெய்திருந்தது. கன்னிமார் 6.8, கொட்டாரம் 5.2, மயிலாடி 6.6, நாகர்கோவில் 10.2, பூதப்பாண்டி 11.6, முக்கடல் 10, தக்கலை 20.2, அடையாமடை 18.6, கோழிப்போர்விளை 22.2, மாம்பழத்துறையாறு 20.5, சிற்றார்-1ல் 17.4, களியல் 5.2, பேச்சிப்பாறை 6.8, பெருஞ்சாணி 13.8, புத்தன் அணை 13.2, சுருளோடு 26.4, ஆனைக்கிடங்கு 20, முள்ளங்கினாவிளை 9.2 மி.மீட்டரும் மழை பெய்திருந்தது.
மாவட்டத்தில் நேற்று காலை நிலவரப்படி பேச்சிப்பாறை அணை நீர்மட்டம் 44.76 அடியாகும். அணைக்கு 575 கன அடி தண்ணீர் வரத்து கணப்பட்டது. 481 கன அடி தண்ணீர் திறந்து விடப்பட்டிருந்தது. பெருஞ்சாணி நீர்மட்டம் 72.22 அடியாகும். அணைக்கு 401 கன அடி தண்ணீர் வரத்து காணப்பட்டது. 360 கன அடி தண்ணீர் திறந்து விடப்பட்டிருந்தது. சிற்றார்-1ல் 15.25 அடியாக நீர்மட்டம் இருந்தது. அணைக்கு 100 கன அடி தண்ணீர் வரத்து காணப்பட்டது. 100 கன அடி தண்ணீர் திறந்து விடப்பட்டிருந்தது. சிற்றார்-2ல் 15.35 அடியாக நீர்மட்டம் உள்ளது. பொய்கையில் 15.6 அடியும், மாம்பழத்துறையாறு அணையில் 47.82 அடியும் நீர்மட்டம் உள்ளது. முக்கடல் அணையின் நீர்மட்டம் 22.2 அடியாகும்.
The post குமரி முழுவதும் சாரல் மழை நீடிப்பு appeared first on Dinakaran.