விழுப்புரம் கோட்டம் – தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகத்தின் சார்பில் 10 புதிய பேருந்துகள் : கொடியசைத்து தொடங்கி வைத்தார் முதல்வர் மு.க.ஸ்டாலின்!!

சென்னை: விழுப்புரம் கோட்டம் – தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகத்தின் சார்பில் 10 புதிய பேருந்துகளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கொடியசைத்து தொடக்கி வைத்தார். விழுப்புரம் கோட்டம் – தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகத்திற்கு 2023-24 ஆண்டிற்கு 247 புறநகர பேருந்துகள் மற்றும் 64 நகரப் பேருந்துகள் ஒதுக்கீடு செய்யப்பட்டு, அதில் பழைய பேருந்துகளுக்கு மாற்றாக இதுவரை 134 புறநகர பேருந்துகள் மற்றும் 12 நகர பேருந்துகள் புதிதாக கூண்டு கட்டி தடத்தில் இயக்கப்பட்டுள்ளது. மேலும், தற்போது இப்பகுதி மக்கள் பயனடையும் வகையில் 3.81 கோடி ரூபாய் செலவில் 8 புறநகர பேருந்துகள் மற்றும் 2 புதிய மகளிர் விடியல் பயணப் நகர பேருந்துகள், என மொத்தம் 10 புதிய பேருந்துகளை முதலமைச்சர் மப்பேடு கூட்ரோட்டில் நடைபெற்ற நிகழ்ச்சியில் தொடங்கி வைத்தார்.

இந்த நிகழ்ச்சியில், நாடாளுமன்ற உறுப்பினர்.சசிகாந்த் செந்தில், சட்டமன்ற உறுப்பினர்கள் .வி.ஜி. ராஜேந்திரன், இனிகோ இருதயராஜ், எஸ். சந்திரன், தலைமைச் செயலாளர்.சிவ் தாஸ் மீனா, இ.ஆ.ப., தமிழ்நாடு பாடநூல் கழகத் தலைவர் திண்டுக்கல் ஐ. லியோனி, சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத் துறை செயலாளர்.ஜெயஸ்ரீ முரளிதரன், இ.ஆ.ப., பள்ளிக்கல்வித் துறை செயலாளர்.ஜெ. குமரகுருபரன், இ.ஆ.ப., தமிழ்நாடு மகளிர் மேம்பாட்டு நிறுவன மேலாண்மை இயக்குநர்.எஸ். திவ்யதர்ஷினி, இ.ஆ.ப., திருவள்ளூர் மாவட்ட ஆட்சித் தலைவர் டாக்டர் த. பிரபுசங்கர், இ.ஆ.ப., முதலமைச்சரின் காலை உணவுத் திட்ட ஒருங்கிணைப்பு அலுவலர்.க. இளம்பகவத், இ.ஆ.ப., புனித அன்னாள் சபையின் தலைமை அன்னை சகோதரி கிளாரா வசந்தி, உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள், ஆசிரியர் பெருமக்கள் மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

 

The post விழுப்புரம் கோட்டம் – தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகத்தின் சார்பில் 10 புதிய பேருந்துகள் : கொடியசைத்து தொடங்கி வைத்தார் முதல்வர் மு.க.ஸ்டாலின்!! appeared first on Dinakaran.

Related Stories: