மழை குறைவாக பெய்துள்ளதால் காவிரியில் இருந்து 8 ஆயிரம் கனஅடி தண்ணீர் மட்டும் தான் திறக்க முடியும்: அனைத்து கட்சி கூட்டத்திற்கு பிறகு முதல்வர் சித்தராமையா திட்டவட்டம்

பெங்களூரு: காவிரியில் தமிழகத்துக்கு தினமும் 1 டிஎம்சி காவிரி நீர் திறந்து விட காவிரி நீர் ஒழுங்காற்று குழு பரிந்துரை செய்துள்ளது. இது தொடர்பாக விவாதிக்க பெங்களூருவில் நேற்று அனைத்துக் கட்சி கூட்டம் நடந்தது. இதில், முதல்வர் சித்தராமையா, துணை முதல்வர் டி.கே.சிவகுமார், சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவர் ஆர்.அசோக், முன்னாள் முதல்வர்கள் டி.வி.சதானந்த கவுடா உள்ளிட்ட பலர் பங்கேற்று கருத்துகளை தெரிவித்தனர்.

பின்னர் முதல்வர் சித்தராமையா நிருபர்களிடம் கூறியதாவது: தமிழகத்துக்கு ஜூலை இறுதி வரை தினமும் 1 டிஎம்சி தண்ணீர் திறந்து விட இயலாது. காவிரி படுகையில் உள்ள நீர்த்தேக்கங்களுக்கு வரும் நீரின் அளவு குறைந்துள்ளது. எனவே, நீர் வழங்க இயலாத நிலை ஏற்பட்டுள்ளது . தினமும் 1 டிஎம்சி விநாடிக்கு 8 ஆயிரம் கனஅடி தண்ணீர் திறந்து விட முடிவு செய்யப்பட்டுள்ளது. ’ என்றார்.

The post மழை குறைவாக பெய்துள்ளதால் காவிரியில் இருந்து 8 ஆயிரம் கனஅடி தண்ணீர் மட்டும் தான் திறக்க முடியும்: அனைத்து கட்சி கூட்டத்திற்கு பிறகு முதல்வர் சித்தராமையா திட்டவட்டம் appeared first on Dinakaran.

Related Stories: