பொதுவிநியோக திட்ட குறைதீர்க்கும் முகாம்கள் வட்ட வழங்கல் அலுவலகங்களில் நடந்தது

 

நாகர்கோவில், ஜூலை 14: வட்ட வழங்கல் அலுவலகங்களில் பொது விநியோக திட்ட குறைதீர்க்கும் முகாம்கள் நேற்று நடந்தது.இதில் பொதுமக்கள் திரண்டு கோரிக்கை மனுக்கள் அளித்தனர். பொது விநியோகத் திட்ட செயல்பாட்டில் காணப்படும் குறைபாடுகளை களைவதற்கும், மக்களின் குறைபாடுகளை கேட்டு உடனுக்குடன் அவற்றை நிவர்த்தி செய்வதற்கும் சிறப்பு மக்கள் குறைதீர் முகாம் குமரி மாவட்டத்தில் அனைத்து வட்ட வழங்கல் அலுவலகங்களில் நேற்று நடைபெற்றது. காலை 10 மணிக்கு முகாம் தொடங்கியது. பிற்பகல் 1 மணி வரை முகாம்கள் நடைபெற்றது.

முகாமில் ரேஷன் கார்டில் பெயர் சேர்த்தல், பெயர் நீக்கம், முகவரி மாற்றம், இறந்த குடும்ப தலைவர்களின் பெயர் மற்றும் புகைப்பட மாற்றம் செய்தல், ரேஷன் கார்டில் பெண் குடும்ப தலைவர் புகைப்படம் மாற்றம் செய்தல் மற்றும் நகல் குடும்ப அட்டை கோரும் மனுக்கள், கைபேசி எண் பதிவு மற்றும் மாற்றம் செய்தலுக்கான கோரிக்கை மனுக்கள் பெறப்பட்டு நடவடிக்கைக்கு உட்படுத்தப்பட்டது. பொது விநியோக திட்ட ரேஷன் கடைகளின் செயல்பாடுகள் மற்றும் அத்தியாவசியப் பொருட்களின் தரம் குறித்த புகார்களும் பெற்றுக்கொள்ளப்பட்டது. முகாமில் பொதுமக்கள் கலந்து கொண்டு பயன் பெற்றனர்.

The post பொதுவிநியோக திட்ட குறைதீர்க்கும் முகாம்கள் வட்ட வழங்கல் அலுவலகங்களில் நடந்தது appeared first on Dinakaran.

Related Stories: