×
Saravana Stores

அரசு பள்ளி தலைமையாசிரியர்களுக்கு பணியிட மாறுதலுக்கான கலந்தாய்வு

 

ஈரோடு, ஜூலை 14: ஈரோட்டில் அரசு மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்களுக்கான பணியிட மாறுதலுக்கான கலந்தாய்வு நேற்று நடைபெற்றது. தமிழகத்தில் அனைத்து அரசு பள்ளி ஆசிரியர்கள், தலைமையாசிரியர்களுக்கான பணியிட மாறுதலுக்கான கலந்தாய்வு ஆன்லைனில் நடந்து வருகிறது. இதில், ஈரோடு முதன்மை கல்வி அலுவலர் அலுவலகத்தில் நேற்று மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் பணியிட மாறுதலுக்கான கலந்தாய்வு நடந்தது.

கலந்தாய்வுக்கு முதன்மை கல்வி அலுவலர் சம்பத் தலைமை தாங்கினார். இந்த கலந்தாய்வில் 32 தலைமை ஆசிரியர்கள் கலந்து கொண்டனர். இதேபோல் அரசு, மாநகராட்சி, நகராட்சி பள்ளி பட்டதாரி ஆசிரியர்கள் மாவட்டம் விட்டு மாவட்டத்துக்கு பணியிட மாறுதல் கோரும் கலந்தாய்வு நடந்தது. இந்த கலந்தாய்வில் பங்கேற்க 329 பேர் விண்ணப்பித்து இருந்தனர். இதில் 6 பேர் பணியிட மாறுதல் உத்தரவு ஆணையை பெற்றனர்.

The post அரசு பள்ளி தலைமையாசிரியர்களுக்கு பணியிட மாறுதலுக்கான கலந்தாய்வு appeared first on Dinakaran.

Tags : Erode ,Tamil Nadu ,Principal ,Dinakaran ,
× RELATED தீபாவளி பலகாரம் தயாரிப்பாளர் விற்பனையாளர்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்