×
Saravana Stores

மிக்ஜாம் புயலில் சேதம் 8 புதிய வீடுகள் கட்டும் பணியை கூடுதல் கலெக்டர் ஆய்வு

 

திருவள்ளூர், ஜூலை 14: திருவள்ளூர் அடுத்த அரண்வாயல் ஊராட்சி ஜெ.ஜெ. நகரில் மிக்ஜாம் புயலால் 8 குடிசை வீடுகள் முற்றிலும் சேதமடைந்தன. இதனையடுத்து தமிழக அரசின் உத்தரவின் பேரில் அந்த 8 வீடுகளை ரூ.3.50 லட்சம் மதிப்பில் புதிதாக கட்டப்பட்டு வருகிறது. இந்த கட்டுமானப் பணிகளை கூடுதல் கலெக்டர் (வளர்ச்சி) என்.ஓ.சுகபுத்ரா நேரில் ஆய்வு செய்தார்.

அப்போது கட்டுமானப் பணிகளை விரைந்து முடிக்குமாறு கூடுதல் கலெக்டர் உத்தரவிட்டார். இந்த ஆய்வின்போது வட்டார வளர்ச்சி அலுவலர்கள் எம்.ஜி.குணசேகரன், கே.ரவி, ஊராட்சி மன்ற தலைவர் காவேரி அன்பழகன், துணைத் தலைவர் ரா.சுந்தரி, ஊராட்சி செயலர் ரூபாவதி ஆகியோர் உடனிருந்தனர்.

The post மிக்ஜாம் புயலில் சேதம் 8 புதிய வீடுகள் கட்டும் பணியை கூடுதல் கலெக்டர் ஆய்வு appeared first on Dinakaran.

Tags : Cyclone Mikjam ,Thiruvallur ,Aranwayal panchayat J.J. ,Cyclone ,Mikjam ,Tamil Nadu government ,Dinakaran ,
× RELATED ரயிலில் இருந்து தவறி விழுந்த பயணியை...