×
Saravana Stores

சோழவரம் காவல் நிலையத்தில் ஆவடி மாநகர காவல் ஆணையர் திடீர் ஆய்வு

 

புழல், ஜூலை 14: சோழவரம் காவல் நிலையத்தில் ஆவடி மாநகர காவல் ஆணையர் திடீர் ஆய்வு மேற்கொண்டார். ஆவடி மாநகர காவல் ஆணையர் சங்கர் நேற்று சோழவரம் காவல் நிலையத்தில் திடீர் ஆய்வு நடத்தினார். இந்த ஆய்வில் காவல் நிலையத்தில் ரவுடிகள் மீதான நடவடிக்கைகள் குறித்தும், நிலுவையில் உள்ள கொலை மற்றும் குற்ற வழக்குகளின் முன்னேற்றம், போதை பொருள் குற்றவாளிகள் மற்றும் குற்றவாளிகளின் மீதான வழக்குகள் குறித்து ஆய்வு செய்து உடனுக்குடன் முடித்திட காவல்துறை அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.

சுமார் ஒரு மணி நேரம் நடைபெற்ற இந்த ஆய்வின் போது செங்குன்றம் காவல் மாவட்ட துணை ஆணையர் பாலகிருஷ்ணன், உதவி ஆணையர் ராஜா ராபர்ட், சோழவரம் போலீஸ் இன்ஸ்பெக்டர் ராஜ்குமார் மற்றும் உதவி ஆய்வாளர்கள், காவலர்கள் உடன் இருந்தனர். காவல் ஆணையரின் திடீர் ஆய்வு காரணமாக சோழவரம் காவல் நிலையத்தில் பரபரப்பு ஏற்பட்டது.

The post சோழவரம் காவல் நிலையத்தில் ஆவடி மாநகர காவல் ஆணையர் திடீர் ஆய்வு appeared first on Dinakaran.

Tags : Aavadi ,Metropolitan Police Commissioner ,Cholavaram Police Station ,Puzhal ,Avadi Metropolitan Police Commissioner ,Avadi Municipal Police ,Commissioner ,Shankar ,Dinakaran ,
× RELATED மக்கள் அதிகம் கூடும் கடை வீதிகள்,...