×
Saravana Stores

திருவாலங்காடு அருகே பைக்கில் சென்ற பெண்ணிடம் கவரிங் செயின் பறிப்பு

 

திருத்தணி, ஜூலை 14: திருவாலங்காடு அருகே, பைக்கில் சென்ற பெண்ணிடம் கவரிங் நகைகளை பறித்துவிட்டு சென்ற மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர். திருவாலங்காடு அருகே, அத்திப்பட்டு கிராமத்தைச் சேர்ந்தவர் மாதவன்(47). இவரது மனைவி மகேஸ்வரி(42). இவர், நேற்று முன்தினம் காலை சின்னம்மா பேட்டையில் உள்ள உறவினர் இல்ல திருமண விழாவில் பங்கேற்று, திருவாலங்காடு சாலையில் சென்றபோது அவரைப் பின் தொடர்ந்து வந்த மர்ம நபர்கள் இருவர் அவர் கழுத்தில் அணிந்திருந்த கவரிங் நகைகளை தங்க நகைகள் என்று நினைத்து பறித்தனர்.

அப்போது, நிலை தடுமாறி கீழே விழுந்த மகேஸ்வரிக்கு தலை மற்றும் கால் பகுதிகளில் காயம் ஏற்பட்டது. அங்கிருந்தவர்கள் அவரை மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் திருவள்ளூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். இந்த வழிப்பறி சம்பவம் தொடர்பாக திருவாலங்காடு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

The post திருவாலங்காடு அருகே பைக்கில் சென்ற பெண்ணிடம் கவரிங் செயின் பறிப்பு appeared first on Dinakaran.

Tags : Tiruvalangadu ,Tiruthani ,Madhavan ,Attipattu village ,Maheshwari ,
× RELATED மாணவன் அடித்துக் கொல்லப்பட்ட...