சிவகங்கை, ஜூலை 13: தமிழக அரசின் அறிவிப்பின்படி, சிவகங்கை மாவட்டத்தில் உள்ள கூட்டுறவு சங்கங்களின் பணியாளர்கள் மற்றும் ஓய்வு பெற்ற பணியாளர்களின் குறைகளை தீர்வு செய்திடும் பொருட்டு பணியாளர் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நேற்று சிவகங்கை கூட்டுறவு மேலாண்மை நிலையத்தில் மண்டல இணைப்பதிவாளர் ராஜேந்திர பிரசாத், மத்திய கூட்டுறவு வங்கி இணைப்பதிவாளர்/ செயலாட்சியர் உமா மகேஸ்வரி தலைமையில் நடைபெற்றது. இந்த பணியாளர் நிகழ்வு நாள் முகாமில் மொத்தம் 47 மனுக்கள் பெறப்பட்டன. இதில், சிவகங்கை சரக துணைப்பதிவாளர் பாரதி மற்றும் கூட்டுறவு சங்க பணியாளர்கள் கலந்து கொண்டனர்.
The post கூட்டுறவு சங்க பணியாளர் குறைதீர்க்கும் நாள் கூட்டம் appeared first on Dinakaran.