ஈரோடு, ஜூலை 13: தாளவாடி அடுத்துள்ள பனஹள்ளி பாளையம் சாலையில் ஆலமரத்தடியில் சட்டவிரோத மது விற்பனை நடைபெறுவதாக தாளவாடி போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து போலீசார் அங்கு சோதனையிட்டபோது மதுவிற்பனையில் ஈடுபட்டிருந்த பனஹள்ளி, அம்பேத்கர் வீதியை சேர்ந்த மாதேஸ் (44) என்பவரை கைது செய்தனர். இவரிடமிருந்து 11 மதுபாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டது.
இதே போல சிமிட்டஹள்ளி சாலையில் மதுவிற்றதாக பைனாபுரம், சிமிட்டஹள்ளி சந்தமல்லு (38), கல்மண்டிபுரத்தை சேர்ந்த முகேஷ் (30) ஆகிய 3 பேரை தாளவாடி போலீசார் கைது செய்தனர். சத்தியமங்கலம் போலீசார் நடத்திய ரெய்டில் சத்தி கோணமூலை, நஞ்சப்பகவுண்டன்புதூரை சேர்ந்த பூஜா (39), கோபி போலீசார் நடத்திய ரெய்டில் கோபி வாய்க்கால்ரோடு பகுதியை சேர்ந்த குணசேகரன் (40) என்பவரை கைது செய்தனர். கைது செய்யப்பட்டவர்களிடமிருந்து ஏராளமான மதுபாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டது.
The post சட்டவிரோத மது விற்பனை 5 பேர் கைது appeared first on Dinakaran.