ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் பருத்தி ₹70.49 லட்சத்திற்கு ஏலம்: இடைத்தரகர்கள் இல்லாததால் விவசாயிகள் மகிழ்ச்சி

வலங்கைமான், ஜூலை 12: வலங்கைமான் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் 1,096 குவிண்டால் பருத்தி ரூ.70.49 லட்சத்திற்கு ஏலம் போனது. சரியான எடை, இடைத்தரகர்கள் இன்றி விற்பனை செய்யப்பட்டதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர். ல்டா மாவட்டங்களில் நெல் சாகுபடி அறுவடைக்கு பிறகு கோடை சாகுபடி ஆக பெரிய அளவில் பருத்தி சாகுபடி செய்யப்படுவது வழக்கம். வலங்கைமான் மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் சுமார் 14 ஆயிரம் எக்டேரில் சம்பா மற்றும் தாளடி அறுவடை பணிகள் முடிவுற்ற நிலையில் ஆதிச்ச மங்கலம், சந்திரசேகரபுரம் கோவிந்தகுடி மருவத்தூர் மேல விடையல் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் சுமார் 5,250 ஏக்கரில் பருத்தி சாகுபடி செய்யப்பட்டுள்ளது. ந்நிலையில் திருவாரூர் மாவட்டம் வலங்கைமானில் வலங்கைமான் நீடாமங்கலம் சாலையில் பெண்கள் மேல்நிலைப்பள்ளி அருகே உள்ளவேளாண்மை விற்பனை மற்றும் வணிகத்துறை ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் பருத்தி ஏலம் வாரந்தோறும் வெள்ளிக்கிழமை நடைபெறுவது வழக்கம். இருப்பினும் நடப்பு பருவத்தில் பருத்தி ஏலம் வாரந்தோறும் புதன்கிழமை நடைபெறுகிறது.

இந்நிலையில் நேற்று முன்தினம் ஒழுங்குமுறை விற்பனை கூட செயலாளர் மல்லிகா (பொ) உத்தரவின்பேரில் பருத்தி மறைமுக ஏலம் நடைபெற்றது.பருத்தி ஏலத்தில் 200க்கும் மேற்பட்ட விவசாயிகள் பருத்தி மூட்டைகளை கொண்டு வந்தனர். சேலம், ஈரோடு, கோயமுத்தூர், கும்பகோணம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து 7 வியபாரிகள் கலந்து கொண்டனர். பருத்தி அதிகபட்ச விலையாக குவிண்டால் 7,249 ரூபாய்க்கும், குறைந்தபட்ச விலையாக 5,759 ரூபாய் க்கும் சராசரி விலையாக குவிண்டால் ரூ.6,398க்கும் ஏலம் போனது. நேற்று முன் தினம் நடைபெற்ற பருத்தி மறைமுக ஏலத்தில் 1,096குவிண்டால் பருத்தி 70 லட்சத்து 49 ஆயிரத்து 399 ரூபாய்க்கு ஏலம் போனது.ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் நடைபெறும் பருத்தி ஏலத்தில் விவசாயிகள் தங்களது பருத்தியை நன்கு உலர்த்தி கொண்டு வந்து ஏலத்தில் கலந்து கொள்ள கேட்டுக் கொள்ளப்படுகிறது.சரியான எடை மற்றும் நல்ல விலையில் பருத்தியை இடைத்தரகர்கள் இன்றி விற்பனை செய்து பயன்பெற ஒழுங்குமுறை விற்பனை கூட மேற்பார்வையாளர் வீராச்சாமி விவசாயிகளுக்கு அழைப்பு விடுத்துள்ளார்.

மன்னார்குடி: மன்னார்குடி ஒழுங்கு முறை விற்பனை கூடத்தில் திருவாரூர் விற்பனைக்குழு செயலாளர் (பொ) மல்லிகா தலைமையில், கண்காணிப் பாளர் முருகானந்தம் ஆகியோர் முன்னிலையில் பருத்தி ஏலம் நேற்று நடந்தது.
இதில், 59 விவசாயிகள் கலந்து கொண்டு, 65.25 குவின்டால் பருத்தி பஞ்சு களை ஏல த்துக்கு கொண்டு வந்தனர். திருவாரூர், திருப்பூர், செம்பனார் கோவில், கும்பகோணம் பண்ருட்டி உள்ளிட்ட பல்வேறு ஊர்களில் இருந்து வணிகர்கள் நேரிடையாக கலந்து கொண்டு பருத்தியை ஏலத்தில் எடுத்தனர். இதில் அதிகபட்சமாக ஒரு குவிண்டால் பருத்தி 6369ரூபாய்க்கும், குறைந்த பட்சமாக ஒரு குவிண்டால் பருத்தி ரூ.5499 க்கும் விற்பனையானது. ஒவ் வொரு வாரமும் புதன் கிழமை அன்று மாலை மன்னார்குடி ஒழுங்கு முறை விற்பனை கூடத்தில் பருத்தி ஏலம் நடைபெறுவதால் விவசாயிகள் கலந்து கொண்டு பயனடைய கேட்டுக் கொள்ளப்பட்டது.

 

The post ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் பருத்தி ₹70.49 லட்சத்திற்கு ஏலம்: இடைத்தரகர்கள் இல்லாததால் விவசாயிகள் மகிழ்ச்சி appeared first on Dinakaran.

Related Stories: