ஈரோடு, ஜூலை 12: ஈரோட்டில் நடந்த பட்டதாரி ஆசிரியர்கள் பணியிட மாறுதலுக்கான கலந்தாய்வில் 90 பேர் பணியிட மாற்ற உத்தரவு பெற்றனர். ஈரோடு முதன்மை கல்வி அலுவலர் அலுவலகத்தில் நேற்று முன்தினம் பட்டதாரி ஆசிரியர்களுக்கான வருவாய் மாவட்டத்திற்குள் பணியிட மாற்றத்திற்கான கலந்தாய்வு நடந்தது. இதில் பங்கேற்க 441 பட்டதாரி ஆசிரியர்கள் கலந்து கொண்டனர். இதில், தமிழ் பாட ஆசிரியர்கள் 15, ஆங்கில பாடத்திற்கு 14, கணிதம் பாடத்திற்கு 11, அறிவியல் பாடத்திற்கு 34, சமூக அறிவியல் பாடத்திற்கு 16 என மொத்தம் 90 பேர் பணியிட மாற்றம் பெற்றனர்.
இவர்களுக்கு முதன்மை கல்வி அலுவலர் சம்பத்து, பணியிட மாறுதல் உத்தரவு ஆணையை வழங்கினார். இதேபோல், தொடக்க கல்வி இயக்ககம் சார்பில் தொடக்க, நடுநிலை பள்ளி ஆசிரியர்களுக்கான பணியிட மாறுதல் கலந்தாய்வு நடந்து வருகிறது. ஈரோடு காளைமாட்டு சிலை அருகே உள்ள உதவி தொடக்க கல்வி அலுவலர் அலுவலகத்தில் இன்று(12ம் தேதி) பட்டதாரி ஆசிரியர்களுக்கான பொதுமாறுதல் கலந்தாய்வு கல்வி மாவட்டத்துக்குள் நடைபெற உள்ளது.
The post பட்டதாரி ஆசிரியர்கள் 90 பேர் பணியிட மாற்றம் appeared first on Dinakaran.