×
Saravana Stores

ரூ.7 கோடியில் செயற்கை இழை ஓடுதளம்

 

ஈரோடு, ஜூலை 12: ஈரோடு வஉசி விளையாட்டு மைதானத்தில் ரூ.7 கோடி செலவில் மேற்கொள்ளப்பட்டு வரும் செயற்கை இழை ஓடுதளம் அமைக்கும் பணியை கேலோ இந்தியா அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டனர். ஈரோடு வஉசி விளையாட்டு மைதானத்தில் கூடைப்பந்து, கைப்பந்து, கால்பந்து, கபடி ஆகியவை விளையாடுவதற்கு தனித்தனி மைதானம் அமைக்கப்பட்டுள்ளது. தடகள போட்டிகளான ஓட்டம், நீளம் தாண்டுதல், உயரம் தாண்டுதல், குண்டு எறிதல் ஆகியவை விளையாடுவதற்கும் தனித்தனியாக இடவசதிகள் உள்ளன.

இந்நிலையில் விளையாட்டு மைதானத்தில் ரூ.7 கோடி மதிப்பில் செயற்கை இழை ஓடுதளம் அமைக்கும் பணிகள் கடந்த ஓராண்டுக்கு மேலாக நடந்து வருகிறது. தற்போது 95 சதவீதம் முடிவடைந்துள்ள இப்பணிகளை கேலோ இந்தியா திட்ட கண்காணிப்பு அதிகாரிகள் நேரில் ஆய்வு மேற்கொண்டனர். அப்போது, மைதானத்தின் தரம் குறித்து பரிசோதித்தனர். ஆய்வின் போது, மாவட்ட விளையாட்டு அலுவலர் சதீஷ்குமார் மற்றும் துறை அலுவலர்கள் உடனிருந்தனர்.

 

The post ரூ.7 கோடியில் செயற்கை இழை ஓடுதளம் appeared first on Dinakaran.

Tags : Erode ,Gallo India ,Vausi Stadium ,Erode Vausi ,Dinakaran ,
× RELATED போலீசார் சார்பில் 4 இடங்களில் பட்டாசு கடை துவக்கம்