- ஈரோடு
- ஈரோடு மாவட்டம்
- கொள்முதல் திட்ட குறைப்பு கூட்டம்
- 10 தாலுகா
- பொது கொள்முதல்
- குறைப்பு சந்திப்பு
- தின மலர்
ஈரோடு, ஜூலை 12: ஈரோடு மாவட்ட பொது வினியோக திட்ட குறைதீர் கூட்டம் நாளை (13ம் தேதி) நடைபெறவுள்ளது. அதன்படி, ஈரோடு மாவட்டத்தில் உள்ள 10 தாலுகாவிலும் தலா ஒரு ரேஷன் கடையில் இக்குறைதீர் கூட்டம் நடைபெறும். இதில், புதிய ரேஷன், நகல் ரேஷன் கார்டு, ரேஷன் கார்டில் பெயர் சேர்த்தல், நீக்குதல், செல்போன் எண் இணைத்தல் போன்ற கோரிக்கை மனுக்களை பொதுமக்கள் வழங்கலாம்.
அட்டவணையின்படி, ஈரோடு தாலுகாவில் எல்லப்பாளையம் ரேஷன் கடை, பெருந்துறை எம்பிஎன் நகர், சென்னிமலை, மொடக்குறிச்சி நகராட்சி நகர், கொடுமுடி தாமரைப்பாளையம், கோபி கூகலூர், நம்பியூர் ஒழலக்கோயில், பவானி பெருந்தலையூர், அந்தியூர் ஊசிமலை, பர்கூர், சத்தியமங்கலம் கொமராபாளையம், தாளவாடி பழைய ஹாசனூர் ரேஷன் கடைகளில் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெறவுள்ளது.
The post நாளை பொது வினியோக திட்ட குறைதீர் கூட்டம் appeared first on Dinakaran.