லாரி சக்கரத்தில் சிக்கி கல்லூரி மாணவன் பலி


திருத்தணி: திருத்தணி ஆசிரியர் நகரைச் சேர்ந்த ஜெகன் என்பவர் தனியார் ஓட்டுநர் பயிற்சி பள்ளியில் டிரைவிங் பயிற்சியாளராக பணியாற்றி வருகிறார். இவரது மகன் ஜெகன்(18) வண்டலூரில் உள்ள தனியார் கல்லூரியில் பி.காம் 2ம் ஆண்டு படித்து வந்தார். நேற்று மதியம் பைக்கில் திருத்தணி பை-பாஸ் சாலையிலிருந்து சித்தூர் சாலையை நோக்கி ஜெகன் சென்று கொண்டிருந்தார். அப்போது ரயில்வே மேம்பாலம் அருகில் திருப்பதியிலிருந்து காஞ்சிபுரத்திற்கு சிமென்ட் ஏற்றிக்கொண்டு லாரி ஒன்று வேகமாக சென்றது. இதில் ஜெகன் ஓட்டி வந்த பைக் இடதுபுற சாலையோர சுவற்றில் மோதி விபத்துக்குள்ளானது.

இந்த விபத்தில் லாரியின் பின் பக்க சக்கரத்தில் சிக்கி கல்லூரி மாணவன் ஜெகன் உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக திருத்தணி அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். விபத்து தொடர்பாக திருத்தணி போலீசார் வழக்குப்பதிவு செய்து குடியாத்தம் அருகே கன்னிகாபுரம் கிராமத்தைச் சேர்ந்த லாரி டிரைவர் முருகையன்(44) என்பவரை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

The post லாரி சக்கரத்தில் சிக்கி கல்லூரி மாணவன் பலி appeared first on Dinakaran.

Related Stories: