நாகர்கோவில், ஜூலை 12: தெற்கு ரயில்வே வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறியிருப்பதாவது: ரயில் எண் 16526/ 16525/ 12633/ 12634 (பெங்களூரு-கன்னியாகுமரி-சென்னை எழும்பூர்-கன்னியாகுமரி- பெங்களூரு எக்ஸ்பிரஸ்) ரயில்களுக்கு ஒரு முன்பதிவு செய்யப்படாத கூடுதல் பெட்டி இணைக்கப்பட்டுள்ளது. பெங்களூருவில் இருந்து கன்னியாகுமரி புறப்படும்போது ஜூலை 24 முதலும், கன்னியாகுமரியில் இருந்து சென்னை எழும்பூர் புறப்படும்போது ஜூலை 25 முதலும், சென்னை எழும்பூர்- கன்னியாகுமரி ரயிலுக்கு ஜூலை 26 முதலும், கன்னியாகுமரி-பெங்களூரு ரயிலுக்கு ஜூலை 27 முதலும் இந்த பெட்டி இணைக்கப்படுகிறது. இதன் மூலம் ஏசி முதல் வகுப்பு ஒரு பெட்டியும், இரண்டு அடுக்கு ஏசி பெட்டி 2ம், மூன்றடுக்கு ஏசி பெட்டி 5ம், ஏசி மூன்றடுக்கு எகானமி பெட்டி ஒன்றும், தூங்கும் வசதி பெட்டி 7ம், பொது இரண்டாம் வகுப்பு பெட்டிகள் 5ம் இடம்பெறும். அந்த வகையில் மொத்தம் 21 பெட்டிகள் இந்த ரயிலில் இடம்பெறுகிறது.
The post கன்னியாகுமரி எக்ஸ்பிரஸ்சில் கூடுதல் பெட்டி இணைப்பு appeared first on Dinakaran.