×
Saravana Stores

ரேஷன் கார்டு குறைதீர் முகாம்

காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் மாவட்டத்தில் நாளை ரேஷன் கார்டு குறைதீர் முகாம் நடைபெறவுள்ளது என்று கலெக்டர் கலைச்செல்வி மோகன் தெரிவித்துள்ளார்.காஞ்சிபுரம் மாவட்ட கலெக்டர் கலைச்செல்வி மோகன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: காஞ்சிபுரம் மாவட்டம், காஞ்சிபுரம் வட்டத்தில் காரை, உத்திரமேரூர் வட்டத்தில் காவித்தண்டலம், வாலாஜாபாத் வட்டத்தில் சங்கராபுரம், ஸ்ரீபெரும்புதூர் வட்டத்தில் பிச்சிவாக்கம், குன்றத்தூர் வட்டத்தில் பூந்தண்டலம் ஆகிய கிராமங்களில் நாளை (13.7.2024) காலை 10 மணிக்கு ரேஷன் கார்டு குறை தீர்க்கும் முகாம்கள் நடைபெறவுள்ளன.

மேற்கண்ட கிராமங்களில் வசித்து வரும் பொதுமக்கள், தங்கள் குடும்ப அட்டையில் பெயர் சேர்த்தல், நீக்கம், முகவரி மாற்றம், புதிய குடும்ப அட்டை, நகல் குடும்ப அட்டை, கைபேசி பதிவு மாற்றம் செய்தலுக்கான கோரிக்கை மனுக்களை அளிக்கலாம். மேற்படி மனுக்கள் மீது உடனடி தீர்வு காணப்படும். மேலும், மூன்றாம் பாலினத்தவர், பழங்குடியினர் மற்றும் நரிக்குறவர் சமுதாயத்தினை சேர்ந்தவர்கள் ஏதும் விடுபட்டிருப்பின் அவர்களும், புதிய குடும்ப அட்டைகள் பெறுவதற்குரிய மனுக்களை அளிக்கலாம். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

The post ரேஷன் கார்டு குறைதீர் முகாம் appeared first on Dinakaran.

Tags : Kanchipuram ,Collector ,Kalachelvi Mohan ,Kanchipuram district ,Karai ,Kanchipuram circle ,Kavitandalam ,Uttaramerur ,Valajabad ,
× RELATED உத்திரமேரூர் வட்டத்தில் இன்று உங்களை தேடி உங்கள் ஊரில் திட்ட முகாம்