இந்நிலையில், நீட் தேர்வு முறைகேட்டின் தீவிரத்தின் அடிப்படையிலேயே மறுதேர்வை நடத்துவதா, இல்லையா என்று முடிவு செய்யப்படும் என முந்தைய விசாரணையின்போது சுப்ரீம் கோர்ட்டு தெரிவித்தது. இதுதொடர்பாக மத்திய அரசு இன்று தாக்கல் செய்த கூடுதல் பிரமாணப் பத்திரத்தில், ‘நீட் தேர்வு முடிவுகளின் தரவுகளை வைத்து சென்னை ஐஐடி நடத்திய ஆய்வில், அசாதாரண சூழல் ஏதும் இல்லை என்பது தெரியவருகிறது.
நிகழாண்டுக்கான மருத்துவக் கலந்தாய்வு ஜூலை மாதம் மூன்றாவது வாரத்தில் தொடங்கி நான்கு கட்டங்களாக நடைபெற உள்ளது’ என்று தெரிவித்துள்ளது. இந்த மனு உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி டி.ஒய். சந்திரசூட் தலைமையிலான அமர்வு முன்பு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, தேசிய தேர்வு முகமை மற்றும் மத்திய அரசு பதில்களை தாக்கல் செய்துள்ளனர். ஆனால், சில மனுதாரர்களுக்கு அதன் நகல்கள் இன்னும் கிடைக்கப் பெறவில்லை. அரசின் விளக்கத்துக்கு அவர்களின் பதிலையும் எதிர்பார்ப்பதால் வரும் 18ம் தேதி ஒத்திவைப்பதாக தலைமை நீதிபதி தெரிவித்தார்.
The post நீட் தேர்வு தொடர்பான வழக்கின் விசாரணையை வரும் 18ம் தேதிக்கு ஒத்தி வைத்தது உச்சநீதிமன்றம் appeared first on Dinakaran.