கேளம்பாக்கம் செட்டிநாடு மருத்துவமனையில் கேன்சர் பிரிவு துவக்கம்

சென்னை: கேளம்பாக்கம் செட்டிநாடு மருத்துவமனையில் கேன்சர் பிரிவு மையத்தினை மேகாலயா உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி வைத்தியநாதன் திறந்து வைத்தார். சென்னை அருகே கேளம்பாக்கத்தில் செட்டிநாடு ஹெல்த் சிட்டி உள்ளது. இந்த வளாகத்தில் எம்ஏஎம் ராமசாமி கேன்சர் இன்ஸ்டிடியூட் என்ற பெயரில் புதிய கேன்சர் மருத்துவ பிரிவு தொடங்கப்பட்டுள்ளது. செட்டிநாடு குழும தலைவர் எம்.ஏ.எம்.ஆர். முத்தையா தலைமை தாங்கினார். செட்டிநாடு கல்விக்குழும வேந்தர் கீதா முத்தையா வரவேற்றார். டாக்டர் எம்.ஏ.எம். ராமசாமி கேன்சர் மருத்துவ நிறுவனத்தை மேகாலயா உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி எஸ்.வைத்தியநாதன் திறந்து வைத்து, உரையாற்றினார். நிகழ்ச்சியில் டாக்டர் எம்.ஏ.எம். ராமசாமி கேன்சர் மருத்துவ நிறுவனத்திற்கும், கிளனகல்ஸ் ஹெல்த்கேர் இந்தியா நிறுவனத்திற்கும் இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்திடப்பட்டது. இந்த புரிந்துணர்வு ஒப்பந்தம் சென்னை உயர்நீதிமன்ற முன்னாள் நீதிபதி சொக்கலிங்கம் முன்னிலையில் பரிமாறிக் கொள்ளப்பட்டது. நிகழ்ச்சியில் காணொலி காட்சி மூலம் காஞ்சி சங்கராச்சாரியார் விஜயேந்திரர் வாழ்த்துரையாற்றினார்.

The post கேளம்பாக்கம் செட்டிநாடு மருத்துவமனையில் கேன்சர் பிரிவு துவக்கம் appeared first on Dinakaran.

Related Stories: