சேலம் மாநகரில் உரிய ஆவணமின்றி இயங்கிய 10 ஆட்டோக்கள் பறிமுதல்

*ரூ.2 லட்சம் அபராதம்

சேலம் : சேலம் மாநகரத்தில் கிழக்கு வட்டார போக்குவரத்து அலுவலகத்தில், ஏராளமான ஆட்டோக்கள் பதிவு செய்து இயங்கி வருகின்றனர். நேற்று மாலை, சேலம் பழைய பேருந்து நிலையத்தில் உள்ள ஆட்டோ ஸ்டாண்டில், கிழக்கு ஆர்டிஓ தாமோதரன் அறிவுறுத்தலின் பேரில், வட்டார போக்குவரத்து மோட்டார் வாகன ஆய்வாளர்கள் மாலதி, மோகன் ஆகியோர் கொண்ட குழுவினர், திடீரென வாகன தணிக்கையில் ஈடுபட்டனர். அப்போது 10 ஆட்டோக்களுக்கு இன்சூரன்ஸ், தகுதிச்சான்றிதழ் உள்ளிட்ட ஆவணங்கள் எதுவும் இல்லாமல் இயங்கி வந்தது தெரியவந்தது.

இதையடுத்து அந்த ஆட்டோக்களை பறிமுதல் செய்து ₹2லட்சம் அபராதம் விதிக்கப்பட்டது. தொடர்ந்து பறிமுதல் செய்யப்பட்ட ஆட்டோக்களை, டவுன் காவல்நிலையத்திற்கு கொண்டு சென்றனர். இதுகுறித்து அதிகாரிகள் கூறுகையில், ‘பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்கள் அனைத்திற்கும், உரிய ஆவணங்கள் சமர்பித்தால் மீண்டும் உரிமையாளரிடம் ஒப்படைக்கப்படும். ஆட்டோ ஓட்டுநர்கள் இன்சூரன்ஸ், தகுதிச்சான்றிதழ், அனுமதிச்சான்றிதழ் உள்ளிட்ட அனைத்து ஆவணங்களும் சரியான முறையில் பராமரிக்க வேண்டும். போக்குவரத்து விதிமுறைகளை கட்டாயம் பின்பற்ற வேண்டும்,’ என்றனர்.

The post சேலம் மாநகரில் உரிய ஆவணமின்றி இயங்கிய 10 ஆட்டோக்கள் பறிமுதல் appeared first on Dinakaran.

Related Stories: