முழுக்கோடு ஊராட்சியில் ரேஷன் கடையில் நீர்க்கசிவு பொருட்கள் சேதம்

அருமனை, ஜூலை 10 : முழுக்கோடு ஊராட்சிக்கு உட்பட்ட மூடோடு பகுதியில் அரண்மனை கூட்டுறவு பண்டகசாலை சார்பில் அம்மா சிறு கூட்டுறவு சிறப்பு அங்காடி உள்ளது. இந்த கட்டிடத்தின் சுவரை ஒட்டி வீடு கட்டி உள்ளனர். அவர்கள் கழிவுநீரை நியாயவிலை கடை சுவற்றில் ஓரம் விடுவதாக தெரிகிறது. இதனால் சுவரின் உட்பகுதியில் கசிவு ஏற்பட்டு, பொருட்கள் சேதம் அடைந்து வருவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. எனவே அதிகாரிகள் இந்த கட்டிடத்தை பார்வையிட்டு, அதன் உறுதி தன்மையை பாதுகாத்து, உணவு பொருட்கள் வீணாவதை தடுக்க உரிய நடவடிக்கை எடுக்க ேவண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

The post முழுக்கோடு ஊராட்சியில் ரேஷன் கடையில் நீர்க்கசிவு பொருட்கள் சேதம் appeared first on Dinakaran.

Related Stories: