சீக்கியர்களுக்கான நீதி அமைப்பின் மீதான தடை நீட்டிப்பு: ஒன்றிய அரசு அறிவிப்பு

புதுடெல்லி: சீக்கியர்களுக்கான நீதி அமைப்பின் மீதான தடையை மேலும் 5 ஆண்டுகளுக்கு நீட்டித்து ஒன்றிய உள்துறை அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது. ஒன்றிய உள்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், நாட்டின் பாதுகாப்பு மற்றும் ஒருமைப்பாட்டுக்கு பாதகம் விளைவிக்கக்கூடிய தேசவிரோத நடவடிக்கைகளில் ஈடுபட்டதற்காக கடந்த 5 ஆண்டுகளுக்கு முன் சீக்கியர்களுக்கான நீதி அமைப்பு தடை செய்யப்பட்டது. எனினும் தடை செய்யப்பட்ட சீக்கியர்களுக்கான நீதி அமைப்பானது இந்தியாவின் இறையாண்மை மற்றும் பிராந்திய ஒருமைப்பாட்டை சீர்குலைக்கும் வகையில் பஞ்சாப் மற்றும் பிற இடங்களில் தேசவிரோத மற்றும் நாச வேலைகளில் தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றது. இந்தியாவில் இருந்து ஒரு பகுதியை பிரிப்பதற்கான நடவடிக்கைகளை சீக்கியர்களுக்கான நீதி அமைப்பு ஊக்குவித்து உதவுகின்றது. இந்த நோக்கத்துக்காக போராடும் பிரிவினைவாத குழுக்களுக்கு ஆதரவளிக்கின்றது. எனவே சீக்கியர்களுக்கான நீதி அமைப்பின் மீது உபா சட்டத்தின் கீழ் விதிக்கப்பட்ட தடையை ஜூலை 10ம் தேதி முதல் மேலும் ஐந்து ஆண்டுகளுக்கு நீட்டிக்கிறது” என குறிப்பிடப்பட்டுள்ளது.

The post சீக்கியர்களுக்கான நீதி அமைப்பின் மீதான தடை நீட்டிப்பு: ஒன்றிய அரசு அறிவிப்பு appeared first on Dinakaran.

Related Stories: