எஸ்பிஐ வங்கியின் பெயரை குறிப்பிட்டு பரிசு விழுந்திருப்பதாக கூறி ஆன்லைனில் பணம் பறிக்கும் மோசடி கும்பல்: உஷாராக இருக்க சைபர் க்ரைம் போலீசார் எச்சரிக்கை

சென்னை: எஸ்பிஐ வங்கியின் பரிசுப் புள்ளிகள் எனக் கூறி நூதன முறையில் பணம் ேமாசடி ெசய்யப்படுவதால், பொதுமக்கள் வங்கி தொடர்பான தகவல்களை யாரிடமும் பகிர வேண்டாம் என மாநில சைபர் க்ரைம் போலீஸ் எச்சரிக்கை விடுத்துள்ளது. தமிழ்நாடு சைபர் க்ரைம் கூடுதல் டிஜிபி சஞ்சய் குமார் நேற்று வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது: சமீப காலங்களில் சைபர் மோசடிக்காரர்கள் போலியான வாட்ஸ்அப் குழுக்களில் ‘ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா’ பரிசு புள்ளிகள் பற்றி பொய்யான செய்திகள் அனுப்புகிறார்கள். அதை உண்மை என்று நம்பி பாதிக்கப்பட்டவர்கள் தங்கள் வங்கி விவரங்களை புதுப்பித்து எஸ்பி வங்கியின் பரிசு புள்ளிகளை கூறுமாறு கேட்கிறார்கள். வங்கி அதிகாரிகள் என நம்பி வங்கி விவரங்கள் மற்றும் ஓடிபி எண்களை கூறுகின்றனர். உடனே சிறிது நேரத்தில் சம்பந்தபட்ட நபர்களின் வங்கி கணக்கில் இருந்து பணம் எடுத்து மோசடியில் ஈடுபடுகின்றனர். இதுபோன்ற மோசடிகளில் பணத்தை இழந்தவர்களிடம் இருந்து தமிழ்நாடு முழுவதிலும் இருந்து 73 புகார்கள் பெறப்பட்டுள்ளன. அந்த புகார்களின் மீது சைபர் க்ரைம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இதுபோன்ற மோசடி நபர்களிடம் கவனமாக இருக்க பொதுமக்கள் சைபர் க்ைரம் போலீசார் வழங்கும் ஆலோசனைகளை பின்பற்ற வேண்டும். அதன் விவரம் வருமாறு:

*உங்கள் சமூக ஊடக கணக்குகளில் தேவையான சரிபார்ப்பை செயல்படுத்தி கூடுதல் பாதுகாப்பை சேர்க்கவும். இது உங்கள் செல்போனுக்கு அனுப்பப்படும் ஓடிபிக்கு கூடுதல் பாதுகாப்பை தரும்.
*தெரியாத தொடர்புகளில் இருந்து வரும் செய்திகள் அல்லது தெரிந்த தொடர்புகளில் இருந்து வரும் எதிர்பாராத ெசய்திகள், குறிப்பாக இணைப்புகள் அல்லது தனிப்பட்ட தகவல்களை கேட்கும் செய்திகளில் மிக கவனமாக இருக்க வேண்டும்.
*சந்தேகமான இணைப்புகளை கிளிக் செய்யாதீர்கள். மேலும் தெரியாத தொடர்புகளில் இருந்து ஏபிகே கோப்புகளை பதிவிறக்காதீர்கள். எந்தவொரு இணையதளம் இல்லது பயன்பாட்டின் தகுதியை அதிகாரப்பூர்வ தளங்களில் எப்போதும் சரிபார்க்கவும்.
*உங்கள் கணக்குகளுக்கு வலுவான, தனித்துவமான கடவுச்சொற்களை பயன்படுத்தி, அவற்றை அடிக்கடி மாற்றுங்கள். பல கணக்குகளில் ஒரே கடவுச்சொல்லை பயன்படுத்தாதீர்கள்.
*உங்கள் சமூக ஊடக குழுக்களில் ஏற்படும் மாற்றங்களை கவனியுங்கள். குழுவின் ஜக்கான்கள் அல்லது பெயர்களில் அனுமதியற்ற மாற்றங்களை கவனித்தால், குழு நிர்வாகிக்கு அறிவிக்கவும். அல்லது அவசியமென்றால் குழுவில் இருந்து விலகுங்கள்.
*உங்கள் வங்கி விவரங்களை சந்தேகத்திற்குரிய தளத்தில் பதிவிட்டு இருந்தால், உங்கள் வங்கியை உடனடியாக தொடர்பு கொள்ளவும். உங்கள் கணக்குகளை பாதுகாக்க அனுமதியற்ற பரிவர்த்தனைகளை தவிர்க்கவும்.
*இதுபோன்ற மோசடியில் யாரேனும் ஏமாந்து இருந்தால் உடனே 1930 என்ற உதவி எண்ணை தொடர்பு கொள்ளவும் அல்லது www.cybercrime.gov.in என்ற இணையத்தில் புகார் அளிக்கவும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

The post எஸ்பிஐ வங்கியின் பெயரை குறிப்பிட்டு பரிசு விழுந்திருப்பதாக கூறி ஆன்லைனில் பணம் பறிக்கும் மோசடி கும்பல்: உஷாராக இருக்க சைபர் க்ரைம் போலீசார் எச்சரிக்கை appeared first on Dinakaran.

Related Stories: