இன்றும் தொடரும் மழை; மும்பைக்கு ‘ரெட் அலர்ட்’: மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்பு

மும்பை: மும்பையில் பெய்து வரும் கனமழையால் பல பகுதிகளுக்கு ரெட் அலர்ட் விடுத்துள்ளது. இதனால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. மகாராஷ்டிரா மாநிலம் மும்பை, புனே உள்ளிட்ட நகரங்களில் கொட்டித் தீர்த்த கனமழையால் சாலை போக்குவரத்து, விமான போக்குவரத்து மற்றும் புறநகர் ரயில் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டது. ரயில் தண்டவாளத்தில் ஆங்காங்கே அடைப்பு ஏற்பட்டால், மழைநீர் தேங்கி நின்றது. சுமார் 50 விமானங்கள் ரத்து செய்யப்பட்டன. ேநற்று முன்தினம் இரவு பெய்த மழையால் பெண் ஒருவர் உயிரிழந்தார்.

பரவலாக மழை பெய்து வரும் பகுதிகளில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் இந்திய வானிலை மையம் வெளியிட்ட அறிவிப்பின்படி, இன்று காலை தொடங்கி அடுத்த 24 மணி நேரத்தில் மும்பையின் பல பகுதிகளில் அதிக மழை பெய்யும்; குறிப்பிட்ட பகுதிகளுக்கு ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்படுகிறது என தெரிவித்துள்ளதால் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. சில பகுதிகளில் அரசு அலுவலகங்களுக்கும் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. இன்றும் ரயில்களின் சேவையை ரயில்வே துறை நிறுத்தி வைத்துள்ளது. தொடர்ந்து கன மழை பெய்து வருவதால், மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.

 

 

The post இன்றும் தொடரும் மழை; மும்பைக்கு ‘ரெட் அலர்ட்’: மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்பு appeared first on Dinakaran.

Related Stories: