ரஷ்யாவின் கொடூரமான ஏவுகணைத் தாக்குதலின் விளைவாக 3 குழந்தைகள் உட்பட 37 பேர் உயிரிழந்துள்ளனர். இந்நிலையில் இந்தியா – ரஷ்யா இடையேயான 22வது உச்சி மாநாட்டில் பங்கேற்பதற்காக பிரதமர் மோடி ரஷ்யா சென்றுள்ளார். ரஷ்ய அதிபர் புதினுடன் மோடி இன்று பேச்சுவார்த்தை நடத்தவுள்ளார். பல்வேறு அரசியல் சூழ்நிலைகளால், இந்த பேச்சுவார்த்தை முக்கியத்துவம் பெற்றுள்ளது. மேற்கத்திய நாடுகள் இருநாட்டு தலைவர்களின் சந்திப்பு குறித்து கருத்துகளை தெரிவித்து வருகின்றன.
இரு தலைவர்களின் சந்திப்புக்குப் பின் இதுகுறித்த முழு விவரம் வெளியாகும் எனத் தெரிகிறது. இந்த சந்திப்பு குறித்து உக்ரைன் அதிபர் ஜெலென்ஸ்கி வெளியிட்ட பதில், ‘உக்ரைனில் இன்று ரஷ்யாவின் ஏவுகணைத் தாக்குதல் காரணமாக 13 குழந்தைகள் உள்பட 37 பேர் கொல்லப்பட்டுள்ளனர். இளவயது புற்றுநோயாளிகள் இருக்கும் குழந்தைகளுக்கான மருத்துவமனையை குறிவைத்து ரஷிய ஏவுகணைத் தாக்கியுள்ளது. பலரும் இடிபாடுகளில் சிக்கியுள்ளனர். உலகின் மிக மோசமான குற்றவாளியை மோடி கட்டிப்பிடித்தது ஏமாற்றமளிக்கிறது’ என்று தெரிவித்துள்ளார்.
The post உலகின் மிக மோசமான குற்றவாளியைக் பிரதமர் மோடி கட்டிப்பிடித்தது ஏமாற்றமளிக்கிறது: உக்ரைன் அதிபர் செலன்ஸ்கி கடும் விமர்சனம் appeared first on Dinakaran.