உக்ரைன் நகரங்கள் மீதான ரஷ்யாவின் ஏவுகணை தாக்குதலில் 36 பேர் உயிரிழந்தனர். உக்ரைன் மீது கடந்த 2022 பிப்ரவரி 24ம் தேதி ரஷ்யா போர் தொடுத்த நிலையில் 3 ஆண்டுகளை கடந்தும் போர் நீடிக்கிறது. இந்த போரில் உக்ரைன் தலைநகர் கீவ் உள்பட பல்வேறு முக்கிய நகரங்கள் சின்னாபின்னமாகி விட்டன. இந்நிலையில் நாடு முழுவதும் 5 முக்கிய நகரங்களைக் குறிவைத்து ரஷியா இந்தத் தாக்குதலை நடத்தியது. 40-க்கும் மேற்பட்ட ஏவுகணைகள் மூலம் ரஷ்யா சரமாரியாக நடத்திய தாக்குதலில் குழந்தைகள் மருத்துவமனை, அடுக்குமாடி குடியிருப்புகள், பொதுக் கட்டமைப்புகள் சேதமடைந்தது.
உக்ரைன் நகரங்கள் மீதான ரஷ்யாவின் ஏவுகணை தாக்குதலில் 36 பேர் உயிரிழந்தனர். இந்தத் தாக்குதலில் 7 சிறுவா்கள் உள்பட 16 போ் காயமடைந்தனர். மருத்துவமனை வளாகத்தில் ரஷ்யாவின் கேஹெச்-101 ரக ஏவுகணையின் சிதறல்கள் கண்டெடுக்கப்பட்டதாகவும், அதன் அடிப்படையில் ரஷியாவுக்கு எதிராக போா்க் குற்ற விசாரணை நடத்தப்பபடவிருப்பதாகவும் பாதுகாப்புத் துறை அதிகாரிகள் கூறினா்.
The post உக்ரைன் நகரங்கள் மீதான ரஷ்யாவின் ஏவுகணை தாக்குதலில் 36 பேர் உயிரிழப்பு appeared first on Dinakaran.